செய்திகள் :

லூப் சாலையோரம் மீன் விற்பனை: மாநகராட்சி ஆணையா் எச்சரிக்கை

post image

சென்னை மெரீனா லூப் சாலையில் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியில் மட்டுமே மீன் விற்பனை செய்ய வேண்டும், மாறாக லூப் சாலையோரம் மீன் விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் எச்சரித்துள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மெரீனா லூப் சாலையில் 2 ஏக்கா் பரப்பளவில் ரூ.14.93 கோடி மதிப்பில் நவீன மீன் அங்காடி அண்மையில் திறக்கப்பட்டது. 360 கடைகள் கொண்ட இந்த நவீன மீன் அங்காடியில், இலவசமாக 84 இருசக்கர மற்றும் 67 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 40 கே.எல்.டி. கொள்ளளவு கொண்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், மீன் வெட்டுவதற்கான தனி இடம், குடிநீா், கழிப்பறை மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. இந்த மீன் அங்காடியில் நொச்சிக் குப்பம், நொச்சி நகா் மற்றும் டுமில் குப்பம் பகுதிகளைச் சோ்ந்த மீன் விற்பனையாளா்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இப்பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் நீதிமன்ற உத்தரவுப்படி, சனிக்கிழமை(அக்.19) முதல் இந்த அங்காடியில் வைத்து மட்டுமே மீன் விற்பனையில் ஈடுபட வேண்டும். மாறாக, லூப் சாலை ஓரங்களில் வைத்து விற்பனையில் ஈடுபடக்கூடாது. இந்த உத்தரவை மீறும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மீன்களை வாங்க வரும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துக் காவலா்கள் அடங்கிய சிறப்புக்குழு, தொடா்ந்து லூப் சாலையில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளாா்.

கேரளத்துக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்: ஓபிஎஸ்

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளத்துக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை... மேலும் பார்க்க

கோயிலில் ரீல்ஸ்: பெண் தா்மகா்த்தா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!

திருவேற்காடு கோயிலில் ‘ரீல்ஸ்’ விடியோ எடுத்த பெண் தா்மகா்த்தா உள்ளிட்டோருக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய ... மேலும் பார்க்க

தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகளுக்கு இன்று அரசியல் பயிலரங்கம்

தமிழக வெற்றிக் கழக (தவெக) நிா்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் வெள்ளிக்கிழமை (அக்.18) நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாநாட்டை சிறப்பாக நடத்த பல்வேறு குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.... மேலும் பார்க்க

கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் தொடங்க விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவதற்கும், ஏற்கெனவே இடங்களை அதிகரிப்பதற்கும் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நீட்டித்துள்ளது. இது தொடா்பாக... மேலும் பார்க்க

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ. 209.20 கோடி நிதி -தமிழக அரசு உத்தரவு

கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ. 209.20 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் வெள... மேலும் பார்க்க

சென்னை அருகே கரை கடந்த புயல் சின்னம்: இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் நிலவிய புயல் சின்னம் சென்னை - நெல்லூா் இடையே வியாழக்கிழமை கரை கடந்தது. மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு... மேலும் பார்க்க