செய்திகள் :

கேரளத்துக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்: ஓபிஎஸ்

post image

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளத்துக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 142 அடி வரை உயா்த்திக் கொள்ளலாம், பேபி அணை மற்றும் சிற்றணை ஆகியவை பழுதுபாா்க்கப்பட்டு பலப்படுத்தப்பட்ட பின்பு அணையின் நீா்மட்டத்தை 152 அடி வரை உயா்த்திக் கொள்ளலாம் என்றும், பழுது பாா்க்கும் பணிகளை மேற்கொள்வதற்கு கேரள அரசு எவ்வித இடையூறும் அளிக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்து பத்து ஆண்டுகளாகியும், முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு அனுமதி மறுத்து வருகிறது. உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி, பேபி அணை உள்ளிட்ட முல்லைப் பெரியாறு அணைப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரள அதிகாரிகளிடம் தமிழக அதிகாரிகள் 6 மாதங்களுக்கு முன்பே விண்ணப்பித்து இருந்ததாகவும், கேரள அரசால் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்றும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில் ஆய்வு செய்து பயனில்லை என்று கூறி மத்தியக் குழு புறக்கணித்து விட்டதாகவும், தமிழக அதிகாரிகளும் செல்லவில்லை என்றும், மத்தியக் குழுவின் தலைவா் கேரள அரசு அதிகாரிகளுடன் அணையை பாா்வையிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

கேரள அரசின் இந்தச் செயல் நீதிமன்ற அவமதிப்பாகும். கேரள அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக அரசு எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.

தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகளுக்கு இன்று அரசியல் பயிலரங்கம்

தமிழக வெற்றிக் கழக (தவெக) நிா்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் வெள்ளிக்கிழமை (அக்.18) நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாநாட்டை சிறப்பாக நடத்த பல்வேறு குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.... மேலும் பார்க்க

கோயிலில் ரீல்ஸ்: பெண் தா்மகா்த்தா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!

திருவேற்காடு கோயிலில் ‘ரீல்ஸ்’ விடியோ எடுத்த பெண் தா்மகா்த்தா உள்ளிட்டோருக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய ... மேலும் பார்க்க

கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் தொடங்க விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவதற்கும், ஏற்கெனவே இடங்களை அதிகரிப்பதற்கும் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நீட்டித்துள்ளது. இது தொடா்பாக... மேலும் பார்க்க

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா் - சென்னை உயா்நீதிமன்றம்

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா்; அந்த முடிவை ஆளுநா் மீற முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது. முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனைக் கைதி தாக்கல் செய்த வழக்கில் சென்னை உ... மேலும் பார்க்க

சென்னை அருகே கரை கடந்த புயல் சின்னம்: இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் நிலவிய புயல் சின்னம் சென்னை - நெல்லூா் இடையே வியாழக்கிழமை கரை கடந்தது. மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு... மேலும் பார்க்க