செய்திகள் :

சூர்யா 44 கேங்ஸ்டர் படமில்லை..! ரிலீஸ் குறித்து பேசிய கார்த்திக் சுப்புராஜ்!

post image

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் ஆரம்பமானது. அதன்பின், ஊட்டி, கேரளத்தில் நடைபெற்றது.

இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த சூழலில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

இப்படத்தில், சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதையும் படிக்க:நீண்ட நாள்களுக்குப் பிறகு வெற்றி விழா..! நடிகர் ஜீவா நெகிழ்ச்சி!

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கார்த்திக் சுப்புராஜ் பேசியதாவது:

சூர்யா 44 கேஸ்டர் படமில்லை. காதல் கதையுடன் கூடிய அதிகமான சண்டைக் காட்சிகள் இருக்கும். எனக்கு மிகவும் நீண்ட நாள்களாக காதல் கதையை படமாக்கும் எண்ணம் இருந்தது. அதிலும் சூர்யா சார், பூஜா ஹெக்டேவை வைத்து படம் பண்ணும்போது மிகுந்த ஆவலாக இருந்தது.

படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது. படப்பிடிப்பு முடிந்தாலும் இந்தப்படம் அடுத்தாண்டு கோடைக்காலத்தில்தான் வரும். ஆனால், ரிலீஸ் தேதி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. போஸ்ட் புரடக்‌ஷன், இசைக்கு அதிக நேரம் செலவிடுகிறோம். வேலையை ரசித்து செய்கிறோம். ரிலீஸ் தேதி அழுத்தம் இல்லை என்றார்.

புதிய வீட்டுக்கு குடியேறிய ஹன்சிகா..!

தமிழில் ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஹன்சிகா, அதன்பின் ‘பிரியாணி’, ’சிங்கம் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், ச... மேலும் பார்க்க

ரோலக்ஸ் தோற்றத்தில் சதீஷ்..! தமிழ்ப் படம் 3?

எதிர் நீச்சல் படத்தில் நடிகர் சதீஷின் நகைச்சுவை மிகவும் கவனம் பெற்றது. பிறகு கத்தி, மான் கராத்தே, ஆம்பளஆகிய படங்களில் இவரது நகைச்சுவை பெரிதும் பாராட்டப்பட்டன. நகைச்சுவை நடிகரான சதீஷ் கதாநாயகனாக நடித்த... மேலும் பார்க்க

வரம் தரும் வாரம்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (அக்டோபர் 18 - 24) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)பொருளாதார நி... மேலும் பார்க்க

நீண்ட நாள்களுக்குப் பிறகு வெற்றி விழா..! நடிகர் ஜீவா நெகிழ்ச்சி!

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகிய பிளாக் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழின் முன்னணி நடிகராக இருந்தாலும் வெற்றிப் படத்தைக் கொடுக்க முடியாமல் இருந்தார் ஜீவா. அவரது கதை தேர்வுகளும்... மேலும் பார்க்க

கோப்பையை வென்றார் அர்ஜுன் எரிகைசி..! தவறவிட்ட உலக சாதனை!

லண்டனில் நடைபெற்ற டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்று கோப்பையை வென்றார். அரையிறுதியில் பிரக்ஞானந்தாவை அர்ஜுன் எரிகைசி வென்றார். மற்றுமொரு அரையிறுதியில் ... மேலும் பார்க்க