செய்திகள் :

ரோலக்ஸ் தோற்றத்தில் சதீஷ்..! தமிழ்ப் படம் 3?

post image


எதிர் நீச்சல் படத்தில் நடிகர் சதீஷின் நகைச்சுவை மிகவும் கவனம் பெற்றது. பிறகு கத்தி, மான் கராத்தே, ஆம்பள ஆகிய படங்களில் இவரது நகைச்சுவை பெரிதும் பாராட்டப்பட்டன.  

நகைச்சுவை நடிகரான சதீஷ் கதாநாயகனாக நடித்த நாய்சேகர், ஓ மை கோஸ்ட் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

வித்தைக்காரன், கான்ஜூரிங் கண்ணப்பன் ஆகிய படங்களும் கமர்ஷியல் வெற்றி பெற்றன.

தற்போது, சட்டம் என் கையில் படம் செப்.27ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டு, “ரோலக்ஸ் ஆக உணருகிறார்...” எனக் கூறியுள்ளார்.

இதனால், ரசிகர்கள் தமிழ்ப்படம் 3 வருமா என கமெண்ட்டுகளில் கேட்டு வருகிறார்கள்.

தமிழ்ப்படம் சிவா நடிப்பில் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழ்ப்படம் 2 பெரியதாக வெற்றி பெறாவிட்டாலும் கவனம் பெற்றது.

இந்தப் புதிய புகைப்படம் குறித்து நடிகர் சதீஷும் இயக்குநர் சிஎஸ் அமுதனும் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் சூர்யா நடித்த கதாபாத்திரம் ரோலக்ஸ் மிகவும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் நபர் யார்?

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரத்துடன் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி இரண்டு வாரங்களைக் கடக்கிறது. கடந்த வார முடிவில் குறைவான வாக்க... மேலும் பார்க்க

பிளாக் படத்தின் மஜிலி பாடல் விடியோ!

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகிய பிளாக் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.தமிழின் முன்னணி நடிகராக இருந்தாலும் வெற்றிப் படத்தைக் கொடுக்க முடியாமல் இருந்தார் ஜீவா.நீண்ட காலத்திற்குப் பின... மேலும் பார்க்க

சசிகுமாரின் ஃபிரீடம் பட கிளிம்ஸ் விடியோ எப்போது?

இயக்குநரான சசிகுமார் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கருடன் ஹிட் அடித்தது. சமீபத்தில் வெளியான நந்தன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தாழ்த்தப்பட்ட மக்களின் வலியைப் பேசும் படமாக ... மேலும் பார்க்க

காதலனிடம் அடிவாங்கிய பிக் பாஸ் செளந்தர்யா!

பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள நடிகை செளந்தர்யா தனது காதல் அனுபவங்கள் குறித்து கூறியுள்ளார். அதில், தனது காதலரிடம் சாலையில் அடிவாங்கியது குறித்தும், பாட்டிலில் அடி வாங்கியது குறித்தும் குறிப்பிட்டு... மேலும் பார்க்க

இயக்குநரான ஜோஜூ ஜார்ஜ்..! சூர்யா வாழ்த்து!

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில், சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜோஜூ ஜார்ஜ் தமிழில் ஜக... மேலும் பார்க்க