செய்திகள் :

Rashmika Mandanna: அன்று டீப் ஃபேக் வீடியோ; இன்று மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு தேசிய அம்பாசிடர்!

post image

பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் (Deep Fake) வீடியோ கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இவரைத் தொடர்ந்து, நடிகைகள் கஜோல், கேத்ரீனா கைஃப், ஆலியா பட் உள்ளிட்ட பலரின் டீப் ஃபேக் வீடியோக்கள் வெளியாகி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மீது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் கவலை தெரிவித்த மத்திய அரசு, இது போன்ற வீடியோக்களை வெளியிடுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை என அறிவித்தது.

ராஷ்மிகா மந்தனா

இந்த நிலையில், அன்று டீப் ஃபேக் வீடியோவால் பாதிக்கப்பட்ட ராஷ்மிகா மந்தனாவை இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய விளம்பர தூதராக உள்துறை அமைச்சகம் நியமித்திருக்கிறது. இதன்மூலம், சைபர் க்ரைம் ஆபத்துகள் குறித்து தேசிய அளவில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரங்களை ராஷ்மிகா மந்தனா முன்னெடுப்பார் என்று கூறப்படுகிறது. இது குறித்த அறிக்கையில், ``ரஷ்மிகா மந்தனாவின் செல்வாக்கு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை இணையக் குற்றங்களுக்கு எதிரான தேசிய பிரசாரம் மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்கும் என்று உள்துறை அமைச்சகம் நம்பிக்கை கொண்டுள்ளது." என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த நியமனம் குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா, ``சைபர் க்ரைம் என்பது உலகளவில் தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் சமூகங்களைப் பாதிக்கும் ஒரு ஆபத்தான மற்றும் பரவலான அச்சுறுத்தலாகும். இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் என்ற முறையில், இந்தச் சிக்கல்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த இணையப் பாதுகாப்புச் செய்தியை விளம்பரப்படுத்தவும் நான் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன்.

இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபடுவது அவசியம். முன்பு என்னைப் பற்றிய டீப் ஃபேக் வீடியோ வெளியானபோது, இது சைபர் க்ரைம் என்று அறிந்தேன். அந்த சம்பவத்துக்குப் பிறகு, சைபர் க்ரைமுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிவு செய்தேன். இந்திய அரசிடமிருந்து இத்தகைய ஆதரவைப் பெறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாம் விழிப்புணர்வுடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். அதோடு, அத்தகைய குற்றங்களைத் தடுக்கவும் செயல்பட வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

`வேட்டையன்... என்கவுன்ட்டர்... நீதிபதி சத்யதேவ்..!’ - மனம் திறக்கும் நீதிபதி சந்துரு

‘வேட்டையன்’ படம் வெளியாகி என்கவுன்ட்டர் குறித்த விவாதங்களை எழுப்பிக்கொண்டிருக்கும் சூழலில், ரஜினிக்கு டஃப் ஃபைட் கொடுத்த அமிதாப் பச்சனின் ‘நீதிபதி சத்யதேவ்’ கதாப்பாத்திரமும் பேசுபொருள் ஆகியிருக்கிறது.... மேலும் பார்க்க