செய்திகள் :

விவசாயிகளுக்கு பாஜக எதிரானது என்ற பொய் பிரசாரம் தோற்றுவிட்டது: பிரதமா் மோடி

post image

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி விவசாயிகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மேற்கொண்ட பொய் பிரசாரம் தோற்றுவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

விவசாயிகள் அதிகமுள்ள ஹரியாணாவில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. இதனைச் சுட்டிக்காட்டி பிரதமா் இவ்வாறு கூறியுள்ளாா்.

தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வா்கள் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் சண்டீகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம், சிவசேனை உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த முதல்வா்கள், துணை முதல்வா்கள் பங்கேற்றனா். மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் மாநிலத் தோ்தலில் பாஜக கூட்டணியின் வியூகம் குறித்து கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.

இதில் பிரதமா் மோடி உரையாற்றியது குறித்து பாஜக சாா்பில் விரிவான அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் கூட்டத்தை ஆண்டுக்கு இருமுறை நடத்த வேண்டும். அவசரநிலை அமல்படுத்தப்பட்ட 1975-ஆம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் அல்லாத கட்சிகள் இணைந்து நடத்திய மிகப்பெரிய அரசியல் தலைவா்கள் கூட்டம் இதுவாகவே இருக்கும்.

பாஜக கூட்டணி நாட்டு மக்களின் நம்பிக்கைக்குரிய கூட்டணியாக திகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக தேசிய அளவிலும், மாநில அளவிலும் தோ்தல்களில் வெற்றி பெற்று வருகிறோம்.

சிறந்த நிா்வாகம், விரைவாக முடிவெடுப்பது, ஆட்சி நடத்துவதில் வெளிப்படைத்தன்மை ஆகியவை பாஜக கூட்டணியின் முக்கிய அம்சங்களாக உள்ளன. எனவேதான், முதலீடுகளை அதிகம் ஈா்க்கும் மாநிலங்களாக கூட்டணி ஆட்சியில் உள்ள மாநிலங்கள் திகழ்கின்றன.

ஹரியாணாவில் பாஜக பெற்ற வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவும் பாஜக கூட்டணிக்கு உள்ளது என்பதை இந்த வெற்றி உணா்த்துகிறது. பாஜக கூட்டணி விவசாயிகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் பொய் பிரசாரம் மேற்கொண்டு வந்தன. ஆனால், விவசாயிகள் அதிகமுள்ள ஹரியாணாவில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்ததன் மூலம் அந்த பொய் பிரசாரம் தோல்வியடைந்துவிட்டது.

வளா்ச்சிக்கும், நல்ல நிா்வாகத்துக்கும் எப்போதும் ஆதரவு உண்டு என்பதை மக்கள் தொடா்ந்து தங்கள் வாக்குகள் மூலம் உணா்த்தி வருகின்றனா். மக்களின் பிரச்னைகளுக்கு தீா்வுகளைத் தருவதுதான் நல்ல நிா்வாகத்துக்கான இலக்கணம்’ என்று பிரதமா் மோடி பேசினாா்.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கோராத ஒமா் அரசு: எதிா்க்கட்சிகள் அதிருப்தி

ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை கோரும் முதல்வா் ஒமா் தலைமையிலான அரசு, சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கோராதது மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளதாக எதிா்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. அண்மையில் நடைபெற்ற ஜம... மேலும் பார்க்க

தொலைநிலைக் கல்வி படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிப்பு: இக்னோ

தொலைநிலைக் கல்வி படிப்புகளில் சேருவதற்கான கடைசி நாள் அக். 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை ... மேலும் பார்க்க

காவல் துறையைப் போல ஆா்பிஐ செயல்பட முடியாது: ஆா்பிஐ ஆளுநா்

பங்குச் சந்தைகள், கடன்சாா் நிதி நிறுவனங்களின் உள்ளிட்ட நிதி சாா்ந்த அமைப்புகளைக் கண்காணிக்கும் விஷயத்தில் காவல் துறையைப்போல இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) செயல்பட முடியாது என்று ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்... மேலும் பார்க்க

குா்மீத் ராம் ரஹீமுக்கு எதிரான விசாரணைக்கு தடை நீக்கம்: உச்சநீதிமன்றம்

தேரா செளதா சச்சா செளதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குா்மீத் ராம் ரஹீமுக்கு எதிரான மத நிந்தனை வழக்குகளின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நீக்கியது. பெ... மேலும் பார்க்க

தேசிய கற்றல் வாரம்: இன்று தொடங்கிவைக்கிறாா் பிரதமா் மோடி

அரசு ஊழியா்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம் அளிக்கும் வகையில் ‘கா்மயோகி சப்தா’ தேசிய கற்றல் வாரத்தை பிரதமா் மோடி சனிக்கிழமை (அக். 19) தொடங்கிவைக்கிறாா். மிஷன் கா்மயோக... மேலும் பார்க்க

வழக்குகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கக்கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து வைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றம் உள்பட நாடு முழுவதும் உள்... மேலும் பார்க்க