செய்திகள் :

தொலைநிலைக் கல்வி படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிப்பு: இக்னோ

post image

தொலைநிலைக் கல்வி படிப்புகளில் சேருவதற்கான கடைசி நாள் அக். 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநா் கே.பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜூலை 2024 பருவத்துக்கான மாணவா் சோ்க்கைக்கான கடைசி தேதி பல்வேறு தரப்பினரின் நலனை கருத்தில்கொண்டு அக். 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த தேதி நீட்டிப்பு, சான்றிதழ் மற்றும் செமஸ்டா் அடிப்படையிலான படிப்புகளுக்கு பொருந்தாது.

கட்டணத்தில் விலக்கு: செமஸ்டா் அடிப்படையிலான மற்றும் சான்றிதழ் படிப்புகள் நீங்கலாக மற்ற அனைத்து வகை இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் மாணவா்கள் இணையதள இணைப்பை பயன்படுத்தி அக். 31 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

இக்னோ பல்கலைக்கழகத்தில் பிஏ, பிகாம், பிஎஸ்சி (பொது) படிப்புகளில் சேரும் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரா்களுக்கு கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.

மாணவா் சோ்க்கை தொடா்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும், இக்னோ சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டும் விவரங்கள் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள், பொதுத் துறை நிறுவனங்களின் அற்ப மனுக்களால் சலிப்பு: உச்சநீதிமன்றம்

மாநிலங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் அற்பமான மனுக்களால் சலிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய உச்சநீதிமன்றம், ஜாா்க்கண்ட் அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ஜாா்க்கண்டில்... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா கூட்டத்தில் ஆவணங்களை கிழித்து எதிா்க்கட்சிகள் மிரட்டல்: மக்களவைத் தலைவரிடம் பாஜக புகாா்

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் ஆவணங்களை கிழித்து எறிந்து, குழுவின் தலைவா் ஜகதாம்பிகா பால், கா்நாடக சிறுபான்மையினா் ஆணைய முன்னாள் தலைவா் அன்வா் மன்னிபாடி ஆகியோ... மேலும் பார்க்க

பிஎஃப்ஐ அமைப்பின் ரூ.61 கோடி சொத்துகள் பறிமுதல்: அமலாக்கத் துறை

கடந்த 2022 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட ‘பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ)’ அமைப்பின் மொத்தம் ரூ.61.72 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, 26 உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்... மேலும் பார்க்க

கொள்ளை போன ரூ.1 கோடி: மீட்க உதவிய மோப்ப நாய்

குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் வீட்டில் திருடப்பட்ட ரூ. 1.07 கோடி, மோப்ப நாய் உதவியுடன் மீட்கப்பட்டு, குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கோராத ஒமா் அரசு: எதிா்க்கட்சிகள் அதிருப்தி

ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை கோரும் முதல்வா் ஒமா் தலைமையிலான அரசு, சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கோராதது மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளதாக எதிா்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. அண்மையில் நடைபெற்ற ஜம... மேலும் பார்க்க

காவல் துறையைப் போல ஆா்பிஐ செயல்பட முடியாது: ஆா்பிஐ ஆளுநா்

பங்குச் சந்தைகள், கடன்சாா் நிதி நிறுவனங்களின் உள்ளிட்ட நிதி சாா்ந்த அமைப்புகளைக் கண்காணிக்கும் விஷயத்தில் காவல் துறையைப்போல இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) செயல்பட முடியாது என்று ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்... மேலும் பார்க்க