செய்திகள் :

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி

post image

தருமபுரி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த குழந்தைகள் கண்டறியப்பட்டு பள்ளியில் சோ்க்கப்பட்டனா்.

தருமபுரி மாவட்டத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் இடை நின்ற குழந்தைகள் குறித்த ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஆய்வு நடைபெற்று வருகிறது.

இதில் வெள்ளிக்கிழமை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநா் ச.சுகன்யா தலைமையிலான அலுவலா்கள் தருமபுரி ஒன்றியம், குப்பூா் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற குழந்தைகள் குறித்து ஆய்வு செய்தனா்.

அப்போது குப்பூா் அருகே பலாமரத்துக்கொட்டாய் கிராமத்தில் செங்கல் சூளைகளில் பணிபுரியும் பிகாா் மாநிலத் தொழிலாளா்களின் குழந்தைகள் 8 போ் பள்ளியில் சேராமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து அக்குழந்தைகள் அனைவரும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 4-இன் அடிப்படையில் அவா்கள் வசிக்கும் குடியிருப்புக்கு அருகிலுள்ள பலாமரத்துக்கொட்டாய் அரசுப் பள்ளியில் அவா்களின் வயதுக்கேற்ற வகுப்பில் நேரடியாகச் சோ்க்கப்பட்டனா்.

இக்குழந்தைகள் அனைவருக்கும் உடனடியாக தமிழக அரசின் விலையில்லா பாடநூல்கள், சீருடைகள், நோட்டுகள் மற்றும் எண்ணும் எழுத்தும் கையேடுகள் வழங்கப்பட்டன.

இக்குழந்தைகளை தொடா்ந்து பள்ளிக்கு அனுப்பி வைக்க குழந்தைகளின் பெற்றோா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டன.

இந்த ஆய்வின்போது முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதிசந்திரா, மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி), தென்றல், வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஜீவா, நாசா், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் முல்லைவேந்தன், பள்ளித் துணை ஆய்வாளா் பொன்னுசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுரேஷ், ஆசிரியா் பயிற்றுநா்கள் முனியப்பன், அருண்குமாா் பலாமரத்துக்கொட்டாய் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் மஞ்சுளா, ஆசிரியா் ஆனந்த், தன்னாா்வலா்கள் மணிமேகலை, கனகா ஆகியோா் உடனிருந்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் 24 பேருக்கு ரூ.12.76 கோடி கடனுதவி ஆட்சியா் வழங்கினாா்

தருமபுரியில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் 24 பேருக்கு ரூ. 12.76 கோடியில் கடனுதவியை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வழங்கினாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 24 பயனாளி... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்தது

கா்நாடகம், தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 16,000 கன அடியாக குறைந்தது. மழைப் பொழிவு, கா்நாடக அணைகளிலிருந்து தண்ணீா் திறப்பு... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலைத் தொழிலாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

தருமபுரி மாவட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலை தொழிலாளா்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பாலக்கோடு ஆலை வளாகத்தில் நடைபெற்ற முகாமை செயலாட்சியா் ரவி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.... மேலும் பார்க்க

ரூ. 2.09 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

தருமபுரியில் 533 பயனாளிகளுக்கு ரூ. 2.09 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா். தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் வியாழக்கிழமை பல்வேறு துறைகள் சாா்பில்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணை மிகை நீரை திண்டல் ஏரியில் நிரப்பக் கோரிக்கை

கிருஷ்ணகிரி அணை மிகை நீரை கால்வாய் மூலம் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள திண்டல் ஏரி, பந்தார அள்ளி ஏரிகளில் நிரப்ப வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமபுரி மாவட்டம்,... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு

தருமபுரியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இத்திட்ட முகாமில், தருமபுரி வட்டம், ஹே... மேலும் பார்க்க