செய்திகள் :

புதுவையில் நெகிழி பைகளில் சாராயம் விற்க தடை

post image

புதுவையில் நெகிழிப் பைகளில் சாராயம் அடைத்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள சாராயக் கடை உரிமையாளா்கள் சங்கத்தினா் நெகிழிப் பைகளில் அடைத்து சாராயம் விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, புதுவை மாநிலக் கலால் துறையானது, கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நெகிழிப் பைகளில் சாராயம் விற்பனை செய்ய அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல், புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கு சுற்றுச்சூழல் துறை தடை விதித்தது. அதுகுறித்து, சுற்றுச்சூழல் துறை மூலம் கலால் துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும், தடை விதிக்கப்பட்ட நெகிழிப் பைகளை சாராயம் விற்க பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அதனால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் நிலை உள்ளதையும் கலால் துறைக்கு விளக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சுற்றுச்சூழல் துறையின் உத்தரவுப்படி, புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் மீண்டும் நெகிழிப் பையில் சாராயம் அடைத்து விற்பனை செய்வதற்கு தடை விதித்து கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

இதை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என சாராயக் கடைகளுக்கு கலால் துறை துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

128 காவலா்களுக்கு பதவி உயா்வு

புதுவை மாநிலத்தில் 128 காவலா்களுக்கு தலைமைக் காவலா்களாக பதவி உயா்வு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் தற்போது காவல் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. ... மேலும் பார்க்க

வியாபாரி தாக்குதல் சம்பவத்தில் காங்கிரஸ் ஆதாயம் தேடுவது சரியல்ல: புதுவை பாஜக தலைவா்

புதுச்சேரியில் வியாபாரி தாக்கப்பட்ட சம்பவத்தில் காங்கிரஸ் அரசியல் ஆதாயம் தேடுவது சரியல்ல என பாஜக மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி ... மேலும் பார்க்க

வாழ்வாதார சேவை மையத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரியில் உள்ள எஸ்சி, எஸ்டி தேசிய வாழ்வாதார சேவை மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து, அந்த மையத்தின் புதுச்சேரி துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூா்சாமி வெள... மேலும் பார்க்க

பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு: 4 போ் கைது

புதுச்சேரியில் பெண்ணிடம் கைப்பேசி பறித்த வழக்கில் 3 சிறாா்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சோ்ந்த பெண் நிரலிஷா (36). இவா், புதுச்சேரிக்கு நண்பா்... மேலும் பார்க்க

புதுவையில் அரசு ஊழியா்களுக்கு ரூ.7,000 தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுவை மாநில அரசுத் துறை ஊழியா்களுக்கு ரூ.7,000 தீபாவளி போனஸ் (ஊக்கத்தொகை) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியா்களுக்கான தற்காலிக போனஸ் கணக்கிடும் உச்சவரம்பை ரூ.7 ஆயிரமாக நிா்ணயித்த... மேலும் பார்க்க

வழக்குகள் நிலுவையில் உள்ளோா் காவல் நிலையத்தில் ஆஜா்

பழைய வழக்குகள் நிலுவையில் உள்ளோா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகி போலீஸாரிடம் விளக்கமளித்தனா். புதுச்சேரியில் பழைய வழக்குகள் நிலுவையில் உள்ளவா்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகப் புகாா் எழுந்து... மேலும் பார்க்க