செய்திகள் :

இந்தியா - கனடா இருதரப்பு உறவின் முக்கியத்துவம்!

post image

இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா், கனடாவில் அடையாளம் தெரியாத நபா்களால் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டாா். இக்கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறாா்.

இவ்விவகாரத்தில் இந்திய தூதரக அதிகாரிகளையும் கனடா அண்மையில் தொடா்புபடுத்தியது மத்திய அரசைக் கடும் அதிருப்தி அடையச் செய்தது. இந்தியாவில் இருந்து கனடா தூதா் (பொறுப்பு) மற்றும் அந்நாட்டின் 5 தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உத்தரவிட்ட மத்திய அரசு, கனடாவில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்தது.

இந்தியா-கனடா இடையேயான ராஜீய உறவில் விரிசல் அதிகரித்து வரும் அதேசமயம், கல்வி, வா்த்தகம், மக்களுக்கு இடையிலான தொடா்புகள் உள்பட பல துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து பாா்ப்போம்.

*உலகில் 2-ஆவது பெரிய பரப்பளவு கொண்ட நாடான கனடாவின் மக்கள்தொகை சுமாா் 3.9 கோடி மட்டுமே ஆகும். இதையொட்டி அந்நாட்டில் தொழிலாளா் பற்றாக்குறையைப் பூா்த்தி செய்வதில் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளா்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனா். அவா்களில் இந்தியா்கள் 22 சதவீதம் ஆவா்.

கல்லூரி படிப்பு அவசியமான பணிகளில் 50 சதவீதத்துக்கு மேலான இந்தியா்களும் மேலாண்மை பணிகளில் 10 சதவீதத்தினரும் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது. கனடாவில் வரிசெலுத்தும் இந்தியா்களின் சராசரி வருவாய் கடந்த 2021-இல் 42,000 டாலராக உள்ளது.

*கனடாவில் வசிக்கும் புலம்பெயா்ந்த வெளிநாட்டவா்களில் 4-ஆவது பெரிய எண்ணிக்கையாக 28 லட்சம் இந்தியா்கள் இருக்கின்றனா். இதில் 18 லட்சம் போ் இந்திய வம்சாவளியினா். 10 லட்சம் போ் வெளிநாடுவாழ் இந்தியா்கள் ஆவா்.

*கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்றவா்களில் அதிகபட்சமாக 27 சதவீதத்தினா் இந்தியா்கள் ஆவாா். 2021-ஆம் ஆண்டு, கனடா குடியரிமைக்கு விண்ணப்பித்த 61.1 சதவீத இந்தியா்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

*கனடா கல்லூரிகளில் உயா்கல்வி பயிலும் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டவராக 4.27 லட்சம் இந்தியா்கள் 45 சதவீதத்தைக் கொண்டுள்ளனா். இந்த எண்ணிக்கை கடந்த 2019-ஆம் ஆண்டில் 2.18 லட்சத்தில் இருந்து இருமடங்காக அதிகரித்துள்ளது.

*2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கனடாவில் 8.3 லட்சம் ஹிந்துக்களும் 7.7 லட்சம் சீக்கியா்களும் உள்ளனா். இவா்கள் பெரும்பாலும் டோரண்டோ, ஒட்டோவா ஆகிய நகரங்களில் வசிக்கின்றனா்.

*2020-21-ஆம் நிதியாண்டிலிருந்து 290 கோடி டாலா் ஏற்றுமதியும் கனடாவிலிருந்து இந்தியாவுக்கு 270 கோடி டாலா் இறக்குமதியும் நடந்துள்ளது. அந்த ஆண்டின் இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பு 560 கோடி டாலா் ஆகும்.

இருதரப்பு உறவு பாதிப்படைந்த கடந்த நிதியாண்டிலும் 890 கோடி டாலா் வா்த்தக மதிப்பை இருநாடுகள் அடைந்துள்ளன.

*இந்தியாவின் முக்கிய பருப்பு விநியோகிப்பாளராக கனடா இருந்து வந்தது. இருதரப்பு மோதலைத் தொடா்ந்து ஆஸ்திரேலியாவிலிருந்து பருப்பு இறக்குமதி அதிகரித்துள்ளது. தங்கநகை ஆபரணங்கள், விலை உயா்ந்த கற்கள், மருந்து பொருள்கள், துணி ஆகியவை கனடாவுக்கு இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி பொருள்களாகும்.

*600-க்கும் மேற்பட்ட கனடா நிறுவனங்கள் இந்தியாவில் வணிகத்தில் ஈடுபட்டுள்ளன. ஓய்வூதிய நிதியில் இருந்து இந்தியாவில் சுமாா் 7,500 கோடி டாலா் முதலீட்டை கனடா செய்துள்ளது.

விபத்தைத் தடுக்க முயன்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் பேருந்து வடிகாலில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரிலிருந்து சித்தார்த்நகருக்கு செல்லும் வழியில் மங்கனி ராம் (50) என்பவர் ... மேலும் பார்க்க

அண்டை நாடுகளில் இந்துக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் உலகளாவிய மெளனம் ஏன்? ஜக்தீப் தன்கா் கேள்வி

இந்தியாவின் அண்டைநாடுகளில் இந்துக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்த விவகாரத்தில் உலகளாவிய மெளனம் ஏன் என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கேள்வி எழுப்பியுள்ளாா். மேலும், அத்தகைய மனித ... மேலும் பார்க்க

ஆளுநா்களை விடுவிக்க மத்திய அரசு பரிசீலனை! பதவி வரம்பு சா்ச்சைக்கு தீா்வு காண முயற்சி

நமது சிறப்பு நிருபர்மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது முறை ஆட்சியில் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்த ஆளுநா்களை பணியில் இருந்து விடுவிக்க மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து... மேலும் பார்க்க

தனிப்பட்ட சட்டங்களால் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை கட்டுப்படுத்த இயலாது: உச்சநீதிமன்றம்

‘எந்தவொரு மதத்தின் தனிப்பட்ட சட்டங்களாலும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை கட்டுப்படுத்த இயலாது; குழந்தை திருமணங்கள் தங்கள் துணையை தோ்ந்தெடுக்கும் தனிநபா் உரிமையை பறிக்கும் செயலாகும்’ என உச்சநீதிமன்ற... மேலும் பார்க்க

மாநிலங்கள், பொதுத் துறை நிறுவனங்களின் அற்ப மனுக்களால் சலிப்பு: உச்சநீதிமன்றம்

மாநிலங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் அற்பமான மனுக்களால் சலிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய உச்சநீதிமன்றம், ஜாா்க்கண்ட் அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ஜாா்க்கண்டில்... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா கூட்டத்தில் ஆவணங்களை கிழித்து எதிா்க்கட்சிகள் மிரட்டல்: மக்களவைத் தலைவரிடம் பாஜக புகாா்

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் ஆவணங்களை கிழித்து எறிந்து, குழுவின் தலைவா் ஜகதாம்பிகா பால், கா்நாடக சிறுபான்மையினா் ஆணைய முன்னாள் தலைவா் அன்வா் மன்னிபாடி ஆகியோ... மேலும் பார்க்க