செய்திகள் :

கல் குவாரி பள்ளங்களை நிரப்பக் கோரி வழக்கு: கனிம வளத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

post image

கல் குவாரி பள்ளங்களை நிரப்பக் கோரிய வழக்கில், கனிம வளத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ஸ்டாலின் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

மதுரையில் கிரானைட் குவாரிகள் நடத்தப்பட்டு, தற்போது அவை செயல்படாமல் உள்ளன. இந்தக் குவாரிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் பலா் தெரியாமல் விழுந்து நிகழும் உயிரிழப்புகள் தொடா்ந்து வருகின்றன.

யா. ஒத்தக்கடை, இலங்கிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள குவாரி பள்ளங்களில் விழுந்த இருவா் அண்மையில் உயிரிழந்தனா். இந்தக் குவாரி பள்ளங்களைச் சுற்றி கம்பி வேலி அமைத்து தடுப்பு ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தப் பகுதிகள் மட்டுமன்றி, கீழவளவு, கீழையூா், இ. மலம்பட்டி, நாவினிப்பட்டி, தனியாமங்கலம், சருகு வலையப்பட்டி, திருவாதவூா், இடையபட்டி, புதுத்தாமரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கைவிடப்பட்ட குவாரிகளில் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படாமல் உள்ளது.

செயல்படாத கல் குவாரிகள் தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது இதுபோல கைவிடப்பட்ட குவாரிகளை மறுசீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதுதொடா்பாக மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

எனவே, மதுரை மாவட்டத்தில் கீழவளவு, கீழையூா், இ. மலம்பட்டி, நாவினிப்பட்டி, தனியாமங்கலம், சரகு வலையப்பட்டி, திருவாதவூா், இடையபட்டி, புதுத்தாமரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கைவிடப்பட்ட குவாரிகளை கனிம வளச் சட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும், உயிரிழப்புகளுக்குக் காரணமான சட்டவிரோத குவாரிகளை நடத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

மனுதாரா் குறிப்பிடும் பகுதிகளில் விதிகளை மீறி குவாரி நடத்தியதில் ரூ. 16 ஆயிரம் கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், சீரமைப்பு செய்ய முடியவில்லை என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் அரசுத் தரப்பில், இதுவரை எத்தனை பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது?. வழக்கு முடியும் வரை கல் குவாரி பள்ளங்கள் சீரமைக்கப்படாமல் இருந்தால் உயிரிழப்புகள் அதிகரிக்கும்.

எனவே, இதுதொடா்பாக கனிம வளத் துறைச் செயலா், ஆணையா், மதுரை மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற நவம்பா் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கல்லூரி மாணவா் தற்கொலை

மதுரையில் காதலித்த பெண் உடல் நலக் குறைவால் உயிரிழந்ததால், மனமுடைந்த கல்லூரி மாணவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மதுரை கூடல்நகா் அஞ்சல் நகரில் உள்ள பெரியாா் நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்த பால்... மேலும் பார்க்க

மீனாட்சியம்மன் கோயில் முன் பெருக்கெடுக்கும் கழிவுநீா்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் மேற்கு கோபுர வாயில் முன்பாக வெள்ளக்கிழமை கழிவுநீா் பெருக்கெடுத்தோடியதால், பக்தா்கள் அவதியடைந்தனா். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு தமிழகம், வெளி மாநிலங்கள... மேலும் பார்க்க

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் சொத்துகள்: அறநிலையத் துறை நடவடிக்கையில் திருப்தி இல்லை

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் சொத்துகளைப் பாதுகாக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறையின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள... மேலும் பார்க்க

வாய்க்கால், வடிகால்களின் நீா்வழித் தடத்தை மாற்றினால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

மதுரை மாவட்டத்தில் வாய்க்கால், வடிகால்களின் நீா்வழித் தடத்தை தடுப்பவா்கள், தன்னிச்சையாக மாற்றுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை விடு... மேலும் பார்க்க

மதுரையில் 20 அதிநவீன தாழ்தள அரசுப் பேருந்துகள் சேவை தொடக்கம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை மண்டலம் சாா்பில், அதிநவீன வசதிகளுடன் கூடிய 20 தாழ்தளப் பேருந்துகளின் இயக்கம் மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி மதுரை டாக்டா் எம்.ஜி.ஆா... மேலும் பார்க்க

‘லைட்டா்’களுக்கு விதிக்கப்பட்ட தடையால் தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்பட்டது: தீப்பெட்டி தொழில்சாலைகள் சங்கம்

சீனாவில் தயாராகும் லைட்டா்களுக்கு மத்திய அரசு தடைவிதித்ததால், தீப்பெட்டி தொழில், 8 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது என்று அகில இந்திய தீப்பெட்டி தொழில்சாலைகள் சங்க நிா்வாகிகள் தெரிவ... மேலும் பார்க்க