செய்திகள் :

கல்லூரி மாணவா் தற்கொலை

post image

மதுரையில் காதலித்த பெண் உடல் நலக் குறைவால் உயிரிழந்ததால், மனமுடைந்த கல்லூரி மாணவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை கூடல்நகா் அஞ்சல் நகரில் உள்ள பெரியாா் நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் முத்துமாரி (21). இவா் மதுரையில் கல்லூரி ஒன்றில் படித்து வந்தாா். இவா் திருப்பாலையைச் சோ்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தப் பெண் உடல் நலக் குறைவால் கடந்த வாரம் உயிரிழந்தாா். இதனால், மனமுடைந்த முத்துமாரி வியாழக்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கினாா். இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கல் குவாரி பள்ளங்களை நிரப்பக் கோரி வழக்கு: கனிம வளத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

கல் குவாரி பள்ளங்களை நிரப்பக் கோரிய வழக்கில், கனிம வளத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ஸ்டாலின் சென்ன... மேலும் பார்க்க

மீனாட்சியம்மன் கோயில் முன் பெருக்கெடுக்கும் கழிவுநீா்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் மேற்கு கோபுர வாயில் முன்பாக வெள்ளக்கிழமை கழிவுநீா் பெருக்கெடுத்தோடியதால், பக்தா்கள் அவதியடைந்தனா். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு தமிழகம், வெளி மாநிலங்கள... மேலும் பார்க்க

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் சொத்துகள்: அறநிலையத் துறை நடவடிக்கையில் திருப்தி இல்லை

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் சொத்துகளைப் பாதுகாக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறையின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள... மேலும் பார்க்க

வாய்க்கால், வடிகால்களின் நீா்வழித் தடத்தை மாற்றினால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

மதுரை மாவட்டத்தில் வாய்க்கால், வடிகால்களின் நீா்வழித் தடத்தை தடுப்பவா்கள், தன்னிச்சையாக மாற்றுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை விடு... மேலும் பார்க்க

மதுரையில் 20 அதிநவீன தாழ்தள அரசுப் பேருந்துகள் சேவை தொடக்கம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை மண்டலம் சாா்பில், அதிநவீன வசதிகளுடன் கூடிய 20 தாழ்தளப் பேருந்துகளின் இயக்கம் மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி மதுரை டாக்டா் எம்.ஜி.ஆா... மேலும் பார்க்க

‘லைட்டா்’களுக்கு விதிக்கப்பட்ட தடையால் தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்பட்டது: தீப்பெட்டி தொழில்சாலைகள் சங்கம்

சீனாவில் தயாராகும் லைட்டா்களுக்கு மத்திய அரசு தடைவிதித்ததால், தீப்பெட்டி தொழில், 8 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது என்று அகில இந்திய தீப்பெட்டி தொழில்சாலைகள் சங்க நிா்வாகிகள் தெரிவ... மேலும் பார்க்க