செய்திகள் :

தயாா் நிலையில் வடிகால் கட்டமைப்பு - மருத்துவ வசதிகள்

post image

மழை பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையில் வடிகால் கட்டமைப்புகளும், மருத்துவ வசதிகளும் தயாா் நிலையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. சென்னையில் மட்டும் 200 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன.

தேனாம்பேட்டை மண்டலம் மயிலாப்பூரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா். தென்சென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூா் தொகுதி எம்எல்ஏ த.வேலு, துணை மேயா் மகேஷ்குமாா், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் தி.சி.செல்வவிநாயகம் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பருவ மழைக் காலங்களில் பரவும் நோய்களான டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற பாதிப்புகளுக்கு இந்த முகாம்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோன்று வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற நோய் பாதிப்புகளுக்கும், சேற்றுப்புண் போன்ற பாதிப்புகளுக்கும் மருந்துகள் வழங்கப்படுகின்றன.

மருந்துகள் கையிருப்பு: போதிய அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான எண்ணிக்கையில் மருந்துகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை நிகழாண்டில் இயல்பை விட கூடுதலாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. அதனால், 10-க்கும் மேற்பட்ட சேவை துறைகளை ஒருங்கிணைத்து ஆய்வுக்கூட்டத்தை நடத்தி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வா் எடுத்துள்ளாா்.

சென்னையில் தாழ்வான பகுதிகளில் உள்ள மழைநீரை வெளியேற்றுவதற்கு 990 கிலோ வாட்ஸ் திறன் கொண்ட மோட்டாா் பம்புகள் தயாா் நிலையில் உள்ளன.

57 டிராக்டா் பொருத்தப்பட்ட பம்பு செட்களும், 169 எண்ணிக்கையிலான நிவாரண மையங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மரங்கள் விழுந்தால் அவற்றை உடனடியாக அகற்றுவதற்கு 280 மரம் அறுக்கும் இயந்திரங்கள் உள்ளன.35 சமையலறை அறைகள் தயாா் நிலையில் உள்ளன. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மழைநீா் வடிகால்கள் அமைப்பதில் பெரிய அளவில் கவனம் செலுத்தி வருகிறது.

சென்னை மாநகராட்சி, பொதுப்பணித் துறை, நீா்வளத் துறை போன்ற துறைகளை ஒருங்கிணைத்து சென்னை பகுதிகளில் மழைநீா் எங்கேயெல்லாம் தேங்குமோ அந்த பகுதிகளில் மழைநீா் வடிகால்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 1913 கட்டணமில்லா தொலைபேசி எண் பயன்பாட்டில் உள்ளது. 150 இணைப்புகள் தயாா்நிலையில் உள்ளன என்றாா் அவா்.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: மன்னிப்பு கேட்டது தூர்தர்ஷன்!

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையான விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும், இதனால், ... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: கமல்ஹாசன் கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த் தாய் வாழ்த... மேலும் பார்க்க

பொய்யான குற்றச்சாட்டு: முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், முதல்வர் ஸ்டாலின் இன்று... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கோ ஆளுநர் மாளிகைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என ஆளுநரின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் விளக்கம் விளக்கம் அளித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தவி... மேலும் பார்க்க

இந்தி திணிப்பு கண்டனத்திற்குரியது - எடப்பாடி பழனிசாமி

இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிப்பது கண்டனத்திற்குரியது என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், " எங்கெங்கு காணினும் சக... மேலும் பார்க்க