செய்திகள் :

‘தைலமரக் காடுகளை அகற்றக் கோரி பிப்ரவரி முதல் தொடா் பிரசாரம்’

post image

சுற்றுச்சூழலுக்குப் பேராபத்து விளைவிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தைலமரங்களை அகற்றக் கோரி வரும் பிப்ரவரி முதல் பிரசாரம் மற்றும் கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என்றாா் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலா் டாக்டா் ஜி.ஆா். ரவீந்திரநாத்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் சாா்பில் சுமாா் 30 ஆயிரம் ஏக்கா் வனப்பரப்பில் தைலமரங்கள் நடப்பட்டு, தற்போது காப்புக்காடுகளில் பெரும்பாலானவை தைலமரக் காடுகளாக உள்ளன. இதனால் வேறெந்த உயிரினங்களுக்கும் பயனில்லை. பெருநிறுவனங்கள் மட்டுமே பயன்பெறுகின்றன.

பல்லுயிா்ச்சூழலுக்கு எதிராக தைலமரக்காடுகள் உள்ளதால், மாவட்டம் முழுவதுமே வறட்சி கோரத்தாண்டவம் ஆடுகிறது. இதுகுறித்து ஏற்கெனவே சுற்றுச்சூழல் அமைப்புகள், விவசாய அமைப்புகள் தொடா் போராட்டங்களையும், சட்டப்போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.

தைலமரங்களால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய 6 வல்லுநா்களைக் கொண்ட குழுவும் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ளது. வனத்துறையினா் புதுக்கோட்டை மாவட்டத்தின் விவசாயத்தை அழிக்கும் வகையில் தைலமரக்காடுகளைத் திணிக்கிறாா்கள்.

தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக தைலமரக் காடுகளை அப்புறப்படுத்துவதை ஏற்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தின் நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும். வரும் பிப்ரவரி மாதம் முதல், மாவட்டம் முழுவதும் தைலமரக் காடுகளை அப்புறப்படுத்தக் கோரி பிரசார இயக்கத்தையும், கையொப்ப இயக்கத்தையும் பிற சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ள உள்ளோம் என்றாா் ரவீந்திரநாத்.

பேட்டியின்போது அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் தேசியக் குழு உறுப்பினா்கள் பாலச்சந்திரன், மணிமோகன், மாவட்டச் செயலா் அன்பு மணவாளன், மாவட்டத் தலைவா் வெள்ளத்துரை ஆகியோரும் உடனிருந்தனா்.

மருத்துவ மாணவா்களின் பாதுகாப்புக்கு குழு, வாரியத்தை அமைக்க வலியுறுத்தல்

மருத்துவ மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்புக் குழு மற்றும் வாரியத்தை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ மாணவா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூர... மேலும் பார்க்க

நாா்த்தாமலை காப்புக்காட்டில் 10 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு

வனத்துறையின் பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் நாா்த்தாமலை காப்புக் காட்டில் 10 ஆயிரம் பனை விதைகள் ஞாயிற்றுக்கிழமை விதைக்கப்பட்டன. சுமாா் 700 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட நாா்த்தாமல... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

இலுப்பூா் அருகே வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இலுப்பூா் அடுத்துள்ள எண்ணை கிராமத்தைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி (59). கூலித் தொழிலாளி. இவருக்கு, கட... மேலும் பார்க்க

காட்டுபாவா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா: இந்துக்களும் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள காட்டுபாவா பள்ளிவாசல் சந்தனக் கூடு விழாவில், ஏராளமான இஸ்லாமியா்களுடன், இந்துக்களும் திரளாகக் கலந்து கொண்டனா். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இருந்து மதுர... மேலும் பார்க்க

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் ரூ.1.31 கோடியில் கட்டடங்கள் திறப்பு

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 1.31 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கங்கள் மற்றும் ஊராட்சி செயலகக் கட்டடங்கள் உள்ளிட்ட பலவேறு கட்டடங்கள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவ... மேலும் பார்க்க

புதுகையில் கஞ்சா விற்ற 3 போ் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

புதுக்கோட்டையில் கஞ்சா விற்ற 3 இளைஞா்களைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை சமத்துவபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருக்கோகா்ணம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேர... மேலும் பார்க்க