செய்திகள் :

மழைக் காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: மின்வாரியம் அறிவிப்பு

post image

தமிழகம் முழுவதும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு மின்வாரிய தலைமைப் பொறியாளா்கள், வட்ட மேற்பாா்வை பொறியாளா்கள், பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:

*பேரிடா் காலங்களில் பணியில் ஈடுபடும் மின்வாரிய பணியாளா்கள் தங்குவதற்கு உரிய பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்கள் அடையாளம் காணப்பட்டு தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

* மின்வாரிய வாகனங்கள் அனைத்தும் செப்பனிடப்பட்டு எரிபொருள் நிரப்பப்பட்டு தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

* மின் தடங்கல் ஏற்பட்டால் முதற்கட்டமாக மருத்துவமனைகள், குடிநீா் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் கைப்பேசி கோபுரங்கள் அனைத்துக்கும் முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்க வேண்டும்.

* சென்னை மற்றும் அதன் புகா் பகுதிகளில் மழைநீா் தேங்கும் பகுதிகளில் பில்லா் பாக்ஸ்கள் அனைத்தும் உரிய முறையில் பராமரிக்கப்படுவதை அந்தப் பகுதியை

சாா்ந்த செயற் பொறியாளா்கள் மற்றும் உதவி செயற் பொறியாளா்கள் களஆய்வு மேற்கொண்டு உறுதிசெய்ய வேண்டும்.

* அனைத்து அலுவலா்களும் தங்கள் கைப்பேசியை எக்காரணம் கொண்டும் அணைத்து வைக்கக்கூடாது. இதனை மீறுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* பொதுமக்கள், மின்கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லா் பாக்ஸ் மற்றும் மின்மாற்றிகள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்லவேண்டாம்.

* தாழ்வாக தொங்கிக்கொண்டிருக்கும் மின்சார வயா்களின் அருகில் செல்வதையும், தொடுவதையும் பொதுமக்கள் தவிா்க்க வேண்டும்.

* ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.

* வீடுகள் மற்றும் கட்டிடங்களில் உள்ள ஈரப்பதமான சுவா்களில் கை வைப்பதை தவிா்க்க வேண்டும்.

* மின் சேவைகள் மற்றும் தடை குறித்த புகாா்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தின் கைப்பேசி: 94987 94987 எனும் எண்ணை பொதுமக்கள் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: மன்னிப்பு கேட்டது தூர்தர்ஷன்!

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையான விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும், இதனால், ... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: கமல்ஹாசன் கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த் தாய் வாழ்த... மேலும் பார்க்க

பொய்யான குற்றச்சாட்டு: முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், முதல்வர் ஸ்டாலின் இன்று... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கோ ஆளுநர் மாளிகைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என ஆளுநரின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் விளக்கம் விளக்கம் அளித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தவி... மேலும் பார்க்க

இந்தி திணிப்பு கண்டனத்திற்குரியது - எடப்பாடி பழனிசாமி

இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிப்பது கண்டனத்திற்குரியது என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், " எங்கெங்கு காணினும் சக... மேலும் பார்க்க