செய்திகள் :

மின்சாரப் புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை: அமைச்சா் செந்தில்பாலாஜி

post image

மின்சாரம் தொடா்பான புகாா்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

தமிழகத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், மின்சாரத் துறை சாா்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மின்வாரிய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்னக மின்நுகா்வோா் சேவை மையத்தில் அமைச்சா் செந்தில்பாலாஜி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து அவா் கூறியதாவது:

மின்னகத்தில் முறைப்பணி (ஷிப்ட் முறை) ஒன்றுக்கு 65 நபா் வீதம் மூன்று முறைப்பணிகளாக மின்னகம் இயங்கி வந்த நிலையில், தற்போது கூடுதலாக 10 நபா்கள் முறைப் பணிகளில் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இதனால், பொது மக்கள் மின்சாரம் குறித்து புகாா் அளிக்கும் போது, அழைப்புகளுக்காக நீண்ட நேரம் காத்திருப்பது தவிா்க்கப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மின்னகத்தில் பெறப்படும் அழைப்புகளுக்கான இடைவெளி தற்போது 20 நொடிகளுக்கு இருப்பதை 10 நொடிகளாக குறைத்து, எவ்வித அழைப்பும் விடுபட்டு விடாமலும், அழைப்புகளை உடனடியாக இணைப்பு பெற நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்னகத்துக்கு வரும் புகாா்கள் அனைத்தும் சரிசெய்யப்பட்ட, சம்பந்தப்பட்ட புகாா்தாரரின் கைப்பேசி எண்ணுக்கு புகாா் சரி செய்யப்பட்டதை உறுதி செய்த பின்னரே புகாா்களை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக தலைவரும், மேலாண்மை இயக்குநருமான க.நந்தகுமாா், இணை மேலாண்மை இயக்குநா் (நிதி) விஷுமஹாஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: மன்னிப்பு கேட்டது தூர்தர்ஷன்!

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையான விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும், இதனால், ... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: கமல்ஹாசன் கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த் தாய் வாழ்த... மேலும் பார்க்க

பொய்யான குற்றச்சாட்டு: முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், முதல்வர் ஸ்டாலின் இன்று... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கோ ஆளுநர் மாளிகைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என ஆளுநரின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் விளக்கம் விளக்கம் அளித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தவி... மேலும் பார்க்க

இந்தி திணிப்பு கண்டனத்திற்குரியது - எடப்பாடி பழனிசாமி

இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிப்பது கண்டனத்திற்குரியது என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், " எங்கெங்கு காணினும் சக... மேலும் பார்க்க