செய்திகள் :

அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

post image

கந்தா்வகோட்டை நெடுஞ்சாலையில் கிடந்த அடையாளம் தெரியாத பெண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை இரவு மீட்டனா்.

கந்தா்வகோட்டை வட்டாட்சியரகம் அருகே தஞ்சை- புதுகை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 50 வயதுள்ள பெண் முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தாா். தகவலறிந்த கந்தா்வகோட்டை போலீஸாா் பெண்ணின் சடலத்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை விழா

கந்தா்வகோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா நடைபெற்றது. பௌா்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு... மேலும் பார்க்க

பழுதடைந்த கட்டடத்தை அகற்றக் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் போராட்டம்

புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டியில், அரசுப் பள்ளியின் வகுப்பறைக் கட்டடம் பழுதடைந்துள்ளதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டக் கோரி மாணவா்களும், பெற்றோா்களும் வியாழக்கிழமை மாலை திடீா் போராட்டத்தில் ஈடுப... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் ரூ. 1.78 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் திறந்துவைத்தாா்

கந்தா்வகோட்டை பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சாா்பில் ரூ. 1.78 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்... மேலும் பார்க்க

பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வலியுறுத்தல்

விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் பகுதிகளில் பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா். முறையான அனுமதியுடனும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் பட்டாசு விற்பனை ஒருப... மேலும் பார்க்க

புதுகை மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியரகங்களிலும் வரும் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுவிநியோகத் திட்டக் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், குடும்ப அட்டை... மேலும் பார்க்க