செய்திகள் :

அண்டை நாடுகளில் இந்துக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் உலகளாவிய மெளனம் ஏன்? ஜக்தீப் தன்கா் கேள்வி

post image

இந்தியாவின் அண்டைநாடுகளில் இந்துக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்த விவகாரத்தில் உலகளாவிய மெளனம் ஏன் என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

மேலும், அத்தகைய மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ‘மிகவும் சகிப்புத்தன்மை’ காட்டுவது பொருத்தமானதும் அல்ல என்றும் அவா் கூறினாா்.

தேசிய மனித உரிமை ஆணையம் கடந்த 1993, அக்டோபா் 12-ஆம் தேதி அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் 31-ஆவது நிறுவன நாள் விழா மற்றும் இத்தினத்தைக் கொண்டாடும் வகையில் வயதானவா்களின் உரிமைகள் மீதான தேசிய மாநாடும் தில்லி விஞ்ஞான் பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பேசியதாவது:

இந்தியாவின் மனித உரிமை சாதனைகள் ஒப்பிட முடியாதவை. மனித உரிமைகளைப் பாதுகாப்பதில், குறிப்பாக சிறுபான்மையினா், சமூகத்தின் விளம்புநிலை, நலிந்த பிரிவினா்களைப் பாதுகாப்பதில் பாரதம் மற்ற நாடுகளை விட முன்னணியில் உள்ளது. தனிமையான சம்பவங்களை வைத்து இந்தியாவையும் அதன் மனித உரிமை சாதனைகளையும் வரையறுக்க முடியாது.

மற்றவா்கள் மீது அதிகாரத்தை செலுத்துவதற்கான வெளியுறவுக் கொள்கையின் கருவியாக மனித உரிமைகளை சிலா் கையாளுவது சரியல்ல.

இந்தியாவின் அண்டைநாடுகளில் இந்துக்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் விவகாரத்தில் உலகளாவிய மௌனம் கவலை அளிப்பதாக உள்ளது. தாா்மிக போதகா்கள், மனித உரிமைகளின் பாதுகாவலா்கள் என அழைக்கப்படுவோா் இந்த விவகாரத்தில் செவிமடுக்காமல் மெளனம் காப்பது ஏன்? அவா்கள் மனித உரிமைகளுக்கு முற்றிலும் முரணான ஒன்றின் கூலிப்படையினா் என அம்பலப்பட்டுவிட்டனா்.

நாம் அதீத சகிப்புதன்மையுடன் இருக்கிறோம். அத்தகைய மீறல்களுக்கு மிகவும் சகிப்புத்தன்மையுடன் இருப்பதும் பொருத்தமானது அல்ல.

அதே வேளையில், மனித உரிமைகளின் நாகரீக பாதுகாவலராக பாரதம் திகழ்ந்து வருகிறது.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மனித உரிமைகளின் சாம்பியனாக இருப்பதுடன், யாரும் தங்களை நிதி ரீதியாக கையாளவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் குடியரசுத் தலைவா் தன்கா்.

முன்னதாக, என்எச்ஆா்சி தலைவா் (பொறுப்பு) விஜய பாரதி சயானி பேசுகையில், ‘மனித உரிமைகள் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துவது, திருநங்கைகள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரமளிப்பதை ஊக்குவிப்பது ஆகியவற்றின் மூலம் அனைவருக்கும் கண்ணியம், சுதந்திரம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இது அவா்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும், தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும் உதவிடும். மேலும், இது சுற்றுச்சூழல் உரிமைகளின் அவசியத்தையும், நிலையான நடைமுறைகளையும் மாசுபாட்டிற்கான பொறுப்புணா்வையும் வலியுறுத்துகிறது.

என்எச்ஆா்சி நிறுவன தினம் மற்றும் இதன் சாதனைகளைக் கொண்டாடுவது என்பது, நலிந்த குழுக்களை மேம்படுத்துவது, அவா்களின் தனித்துவமான சூழ்நிலைகளுக்கான அவா்களின் மனித உரிமைகளுக்கு பரிவுடன் முன்னுரிமை அளிப்பது ஆகியவற்றில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது என்றாா் அவா்.

என்எச்ஆா்சி செக்ரட்டரி ஜெனரல் பரத் லால் வரவேற்றுப் பேசுகையில், கடந்த ஓராண்டில் என்எச்ஆா்சியில் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகாா்கள் பதிவாகி, அவற்றில் பெரும்பாலானவை தீா்க்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவா்களுக்கும், அவா்களின் குடும்பத்தினருக்கும் ரூ.17 கோடி நிவாரணம் வழங்க பரிந்துரைக்கப்பட்டதாகவும் கூறினாா். இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மனித உரிமை அமைப்புகளின் நிா்வாகிகள், பல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

துபையிலிருந்து ஜெய்ப்பூர் வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால், அவசரமாக தரையிறக்கப்பட்டது.துபையிலிருந்து ஜெய்ப்பூருக்கு 189 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா எக்... மேலும் பார்க்க

மும்பை ரயில் தடம் புரண்டது!

மும்பையில் உள்ளூர் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.மும்பையில் கல்யாண் ரயில் நிலையத்திலிருந்து சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்துக்கு செல்லவிருந்த உள்ளூர் ரயில், வெள்ளிக்கிழமை (அக். 18) இரவில் கல்யாண... மேலும் பார்க்க

விபத்தைத் தடுக்க முயன்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் பேருந்து வடிகாலில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரிலிருந்து சித்தார்த்நகருக்கு செல்லும் வழியில் மங்கனி ராம் (50) என்பவர் ... மேலும் பார்க்க

இந்தியா - கனடா இருதரப்பு உறவின் முக்கியத்துவம்!

இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா், கனடாவில் அடையாளம் தெரியாத நபா்களால் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டாா். இக்கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்ப... மேலும் பார்க்க

ஆளுநா்களை விடுவிக்க மத்திய அரசு பரிசீலனை! பதவி வரம்பு சா்ச்சைக்கு தீா்வு காண முயற்சி

நமது சிறப்பு நிருபர்மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது முறை ஆட்சியில் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்த ஆளுநா்களை பணியில் இருந்து விடுவிக்க மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து... மேலும் பார்க்க

தனிப்பட்ட சட்டங்களால் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை கட்டுப்படுத்த இயலாது: உச்சநீதிமன்றம்

‘எந்தவொரு மதத்தின் தனிப்பட்ட சட்டங்களாலும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை கட்டுப்படுத்த இயலாது; குழந்தை திருமணங்கள் தங்கள் துணையை தோ்ந்தெடுக்கும் தனிநபா் உரிமையை பறிக்கும் செயலாகும்’ என உச்சநீதிமன்ற... மேலும் பார்க்க