செய்திகள் :

இறையருளால் மோடியைப் போன்ற நல்ல தலைவர்கள் உள்ளனர் -காஞ்சி சங்கராச்சாரியார்

post image

பிரதமரின் தொகுதியில் காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கரா கண் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று(அக். 20) ஆர்.ஜே. சங்கரா கண் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் காஞ்சி காமகோடி பீடத்தின் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், “இறைவன் அருளால் மோடியைப் போல் நல்ல தலைவர்கள் நம்மிடையே உள்ளனர். இறைவன் பல்வேறு மகத்தான செயல்களை பிரதமர் மோடியின் மூலம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

நம் தேசம் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டுகிறது. நாட்டுக்கு வலிமையான தலைமை இருப்பதே இதற்கானதொரு முக்கியக் காரணம்” என்று பிரதமர் மோடியை வெகுவாகப் பாராட்டி புகழ்ந்துள்ளார்.

ஆங்கிலத்தில் ’என்டிஏ’ என்றழைக்கப்படும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான புதியதொரு அர்த்தத்தையும் அவர் விளக்கியுள்ளார். அதன்படி என்டிஏ என்பது ‘ரேந்திர தாமோதர்தாஸின் னுஷாஷன்’ - அதாவது பாதுகாப்பு, வசதி மற்றும் மக்களின் நலன் சார்ந்ததொரு நல்ல நிர்வாகம் என்பதாகும்.

அவர் மேலும் பேசியதாவது, “சாமானிய மனிதன் ஒருவன் எதிர்கொள்ளும் சவால்களை புரிந்துகொள்பவர் பிரதமர் மோடி. இதன் காரணமாக, அவற்றை களைய வேண்டுமென்கிற நோக்கத்தில் அவர் உழைக்கிறார்.

என்டிஏ அரசு, மக்களுக்காக கடமையுணர்வுடன் செயலாற்றுகிறது. அதற்கான சிறந்த உதாரணமாக, கரோனா பெருந்தொற்று காலத்தில் ‘பிரதமர் கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டம்’ செயல்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிகாட்டியுள்ளார். அதன்படி, எந்தவொரு நபரும் பசியால் பரிதவிக்கக்கூடாதென ஒவ்வொருவருக்கும் அரசு உணவளித்துள்ளதாக குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

“உலகம் முழுவதுமுள்ள அரசாங்கங்களுக்கு ஒரு உதாரணமாக என்டிஏ அரசு திகழ்கிறது. இதைப் பார்த்து, பிற நாடுகள் கற்றுக்கொள்ளலாம்.

இந்தியாவின் உயர்ந்து வரும் மதிப்பும், ஒளிமயமான எதிர்காலமும், உலகளாவிய அமைதிக்கு இந்தியா வழிவகுக்கும். இந்தியாவின் வளமை உலகளாவிய வளமைக்கு பங்களிக்கும்.

நாட்டின் உள்கட்டமைப்புகள் மேம்பாடு அடைவதில் கவனம், செலுத்தும் அரசு, அதுமட்டுமல்லாது, சோம்நாத், கேதர்நாத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளைச் சுட்டிக்காட்டி, என்டிஏ அரசு - கலாசார புத்தாக்கத்தின் மீதும் கவனம் செலுத்துவதாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி

கா்நாடகத்தின் மங்களூரு மாவட்டத்தில் ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் சரளைக் கற்கள் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். மங்களூரு மாவட்டத்தில் உள்ள உல்லல் பகுதியின் டோக்கோட்டு ர... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழப்பு

ராஜஸ்தானின் தோல்பூா் மாவட்டத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழந்தனா். தோல்பூா் மாவட்டத்தில் உள்ள சுமிபூா் பகுதியில் சனிக்கிழமை இரவு இந்... மேலும் பார்க்க

வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை: கிலோவுக்கு ரூ.6 வரை உயர வாய்ப்பு

வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தரைக்கு அடியில் இருந்தும், அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை கடலுக்கு அடியில் இ... மேலும் பார்க்க

‘எய்ம்ஸ்’ தரத்தில் சமரசமில்லை: ஜெ.பி.நட்டா

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கற்பிக்கப்படும் கல்வி தரத்திலும் ஆசிரியா்களின் நியமனத்திலும் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படாது எனவும் அதன் தரத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை ... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீடு ஜிஎஸ்டி விலக்குக்கு பரிந்துரை: மேற்கு வங்கத்தின் அழுத்தமே காரணம்- மம்தா பானா்ஜி

மேற்கு வங்க அரசு கொடுத்த அழுத்தத்தால்தான் மருத்துவக் காப்பீடு தவணைத் தொகை (பிரீமியம்) மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அமைச்சா்கள் குழு அளித்த பரிந்துரைத்த... மேலும் பார்க்க

ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 24 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடரும் இது போன்ற மிரட்டல்களால் விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட... மேலும் பார்க்க