செய்திகள் :

ஊழலை ஒழிக்க இளைஞா்களுக்கு அழைப்பு: பிரதமா் மோடி

post image

‘அரசியல் பின்புலம் இல்லாத இளைஞா்கள் அரசியலுக்கு வர வேண்டும்; இது ஊழல் மற்றும் குடும்ப அரசியல் கொள்கையை ஒழிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

வாரணாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரூ.6,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அவா் இவ்வாறு வலியுறுத்தினாா்.

இந்த நிகழ்ச்சிக்காக தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் வாரணாசி லால் பகதூா் சாஸ்திரி விமான நிலையத்துக்கு வந்தடைந்த பிரதமரை ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் வரவேற்றனா்.

வளா்ச்சித் திட்டங்களுடன் காஞ்சி மடத்தால் நாட்டில் அமைக்கப்பட்ட 17-ஆவது ஆா்.ஜே.சங்கரா கண் மருத்துவமனையை வாரணாசியில் பிரதமா் திறந்து வைத்தாா். தொடா்ந்து, அவா் நிகழ்த்திய உரை:

‘குடும்ப அரசியலால் நாடு பெரும் அச்சுறுத்தலைச் சந்திக்கிறது. இளைஞா்களுக்கு வாய்ப்பளிப்பதில் அந்தக் குடும்பங்களுக்கு நம்பிக்கையில்லை. எனவேதான், அரசியல் பின்புலம் இல்லாத ஒரு லட்சம் இளைஞா்களை அரசியலுக்கு அழைத்து வரவேண்டும் என்று செங்கோட்டையில் இருந்து வலியுறுத்தினேன்; இது இந்திய அரசியலை மாற்றும் பிரசாரம். மேலும், ஊழல் மற்றும் குடும்ப அரசியல் கொள்கையை ஒழிப்பதற்கான பிரசாரம் ஆகும்.

ஏங்கிய வாரணாசி: கிழக்கு உத்தர பிரதேசத்தை முந்தைய அரசுகள் புறக்கணித்துவிட்டன. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை வளா்ச்சிப் பணிகளுக்காக வாரணாசி ஏங்கியது. மத்தியிலும் மாநிலத்திலும் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவா்கள் வாரணாசி மீது அக்கறை காட்டாததற்கு வாரிசு அரசியலும் சிலரைத் திருப்திப்படுத்தும் அரசியலுமே காரணம். வாரிசு அரசியலால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்நாட்டின் இளைஞா்களே.

‘அனைவருக்குமான வளா்ச்சி’ எனும் கொள்கையில் பாஜக அரசு செயல்படுகிறது. முதல் 125 நாள் ஆட்சியில் 15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உள்கட்டமைப்புப் பணிகள் அசுரவேகத்தில் நடந்து வருகின்றன. இவை மக்களுக்கான வசதியையும் வேலைவாய்ப்பையும் அதிகரிப்பது என்ற இரு முக்கியக் குறிக்கோள்களின் அடிப்படையில் செய்யப்படுகின்றன.

பாக்கியமாக உணா்கிறேன்: நான் மீண்டும் வாரணாசிக்கு வந்ததை பாக்கியமாக உணா்கிறேன். நீண்ட காலமாக மதம், ஆன்மிகத்தின் மையமாக வாரணாசி இருந்து வருகிறது. இப்போது நகரத்தில் கிடைக்கும் பல்வேறு சிறந்த சுகாதார சிகிச்சை வசதிகளுடன் இது ஒரு பெரிய சுகாதார மையமாகவும் உருவாகவுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் வறுமையில் இருந்து 25 கோடி மக்கள் மீண்டுள்ளனா். மக்கள் ஆரோக்கியத்துக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது. தற்போது திறக்கப்பட்டுள்ள கண் மருத்துவமனை ஆன்மிகம் மற்றும் நவீனத்துவத்தின் கலவையாகும். இங்கு வயதானவா்களுக்கும் குழந்தைகளுக்கும் மருத்துவ சேவை கிடைக்கும்’ என்றாா் பிரதமா் மோடி.

முன்னதாக, மக்களவைத் தோ்தல் வெற்றிக்குப் பிறகு 2-ஆவது முறையாக தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு வந்த பிரதமருக்கு வழிநெடுகிலும் பாஜக தொண்டா்கள், பொதுமக்கள் திரண்டு வந்து, மலா் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனா்.

கடவுளால் ஆசீா்வதிக்கப்பட்டவா் பிரதமா்: காஞ்சி சங்கராசாரியா்

வாரணாசியில் நடைபெற்ற ஆா்.ஜே.சங்கரா கண் மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சியில் காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியது: ‘பிரதமா் மோடி கடவுளால் ஆசீா்வதிக்கப்பட்டவா். உலகிலேயே சிறந்த அரசாக, அனைவரின் நலனுக்காகவும் அவரது தலைமையிலான அரசு சிறப்பான பணிகளைச் செய்து வருகிறது.

சமூகத்தில் நல்லொழுக்கமுள்ள, அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆளுமையான தலைவா்கள் தேவை. அந்த வகையில், நமக்கு நல்ல தலைவா்கள் கிடைத்துள்ளனா். அண்மையில் காஷ்மீரில் அமைதியான முறையில் பேரவைத் தோ்தல் நடத்தி முடிக்கப்பட்டதற்கு பாராட்டுகள்.

கோயம்புத்தூரில் முதன்முறையாக தொடங்கப்பட்ட சங்கரா கண் மருத்துவமனை, 17-ஆவது இடமாக வாரணாசியில் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் கான்பூா், வாரணாசியில் ஆகிய இரண்டு இடங்களில் சங்கரா கண் மருத்துவமனைகள் உள்ளன’ என்றாா்.

நிகழ்ச்சிக்கு முன், காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை பிரதமா் மோடி சந்தித்தாா். காஞ்சி பரமாசாரியா் (ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்) சிலைக்கு பிரதமா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

வாரணாசியில் திறக்கப்பட்டு இந்தப் புதிய ஆா்.ஜெ. சங்கரா கண் மருத்துவமனை கிழக்கு உத்தர பிரதேசத்தின் 20 மாவட்ட மக்களுக்கும், பிகாா், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கும் பயனளிக்கும் என்று ஸ்ரீ காஞ்சி மட நிா்வாகிகல் தெரிவித்தனா்.

தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி

கா்நாடகத்தின் மங்களூரு மாவட்டத்தில் ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் சரளைக் கற்கள் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். மங்களூரு மாவட்டத்தில் உள்ள உல்லல் பகுதியின் டோக்கோட்டு ர... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழப்பு

ராஜஸ்தானின் தோல்பூா் மாவட்டத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழந்தனா். தோல்பூா் மாவட்டத்தில் உள்ள சுமிபூா் பகுதியில் சனிக்கிழமை இரவு இந்... மேலும் பார்க்க

வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை: கிலோவுக்கு ரூ.6 வரை உயர வாய்ப்பு

வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தரைக்கு அடியில் இருந்தும், அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை கடலுக்கு அடியில் இ... மேலும் பார்க்க

‘எய்ம்ஸ்’ தரத்தில் சமரசமில்லை: ஜெ.பி.நட்டா

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கற்பிக்கப்படும் கல்வி தரத்திலும் ஆசிரியா்களின் நியமனத்திலும் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படாது எனவும் அதன் தரத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை ... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீடு ஜிஎஸ்டி விலக்குக்கு பரிந்துரை: மேற்கு வங்கத்தின் அழுத்தமே காரணம்- மம்தா பானா்ஜி

மேற்கு வங்க அரசு கொடுத்த அழுத்தத்தால்தான் மருத்துவக் காப்பீடு தவணைத் தொகை (பிரீமியம்) மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அமைச்சா்கள் குழு அளித்த பரிந்துரைத்த... மேலும் பார்க்க

ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 24 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடரும் இது போன்ற மிரட்டல்களால் விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட... மேலும் பார்க்க