செய்திகள் :

ஏதோ ஒரு பாடலும்.. சிறகடிக்கும் சில ஞாபகங்களும்! | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்

இன்று‌  பிஸியான‌ காலை பொழுதில், வானொலியை இயக்கியதில், "ஏதோ ஒரு‌ பாட்டு என் காதில் கேட்கும்... கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்" என்ற‌ மென்மையான பாடல் காற்றலையில் வந்து சேர்ந்தது.. 

இது போன்ற‌ பாடல்கள் , எந்த ஒரு சூழ்நிலையிலும் மனதை அமைதிப்படுத்தும்.. இசையும், வரிகளும் மனதை வருடும் படி இருந்தால்.. பாடத் தெரிகிறதோ இல்லையோ, நாமும் கூட சேர்ந்து பாட ஆரம்பித்து விடுவோம்..

இந்தப் பாடல் பலதரப்பட்ட ஞாபகங்களைப் பற்றி பேசும். சில வரிகள் நம் வாழ்க்கையிலும் ஒத்து போகும். 

Edho oru paatu

இந்த பாடல் ஒலித்து முடித்தபின் கூட, இதே பாடலை நாள்‌ முழுவதும் முணுமுணுத்துக் கொண்டே இருந்தேன்..

மிகவும் பிரதானமாக கூற வேண்டுமானால்.. ". ஞாபகங்கள் மழையாகும்.. ஞாபகங்கள் குடையாகும்.. ஞாபகங்கள் தீமூட்டும்... ஞாபகங்கள் நீரூற்றும்". என்ற வரிகள் மீண்டும் மீண்டும் மனதில் ஓடியபடியே இருந்தது..

உண்மையில் நம் வாழ்க்கை என்பது ஞாபகங்களின் தொடர்ச்சிதான். நம் வாழ்வில் நடந்தேறிய அனைத்தும் நமக்கும் ஞாபகத்தில் இல்லையெனினும், சில விஷயங்கள் நம்மால் மறக்கவே முடியாது. ஆழ்மனதின் ஓரத்தில் அவை சாகாவரம் பெற்று வாழ்ந்து கொண்டே இருக்கும்.

ஞாபகங்கள் இல்லாத மனதை மனித இனம் மற்றும் எல்லா ஜீவராசிகளும் பெற்றிருக்காமல் இருந்திருந்தால், இந்த உலகம் எப்படி இயங்கியிருக்கும்?

அனைவரும் ஓர் இயந்திரம் போல் செயல்பட்டுக் கொண்டேயிருப்போம்.

Edho oru paatu

சில ஞாபகங்கள் சந்தோஷத்தை அளிக்கும்.‌ சில ஞாபகங்கள் வேதனையை அளிப்பதாக இருக்கும்.‌ நம்‌ மனித மனம், இயற்கையாகவே, ஆனந்தங்களை அனுபவித்த தருணங்களை விட, துயரங்களை அனுபவித்த தருணங்களை தேக்கி வைக்கும்.

வெளியில் மற்றவர்களிடம் எவ்வளவுதான்‌ நாம் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனக் காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் என்றோ, எப்போதோ அனுபவித்த வேதனைகளை அவ்வளவு எளிதில் தூக்கி எறிந்து விடமாட்டோம்.

சில வேதனைகள்‌, அடுத்தவர்களின் பார்வையில் சிறியதாகவோ இல்லை இதெல்லாம் ஒரு கஷ்டமா எனத் தோன்றினாலும்.., அவரவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையின் சூழ்நிலையைப் பொறுத்து அவை கடினமாகத்தான் இருந்திருக்கும்.

சிறு சிறு‌ சோகங்களை மனதில் அடுக்கி வைத்திருந்தாலும், ஒவ்வொரு விடியலிலும் வாழ்க்கையை நேர்மறை எண்ணங்களுடன் முன் நகர்த்தி செல்ல, சில கனவுகள், சில ஆசைகள், சில தேடல்கள் , சில முன்னேற்றங்கள் என மனதை வெவ்வேறு ஞாபகங்களும் ஆக்கிரமித்துக் கொள்வதால் வாழ்க்கை சுவாரஸ்யமான ஒன்றாக மாறிவிடுகிறது.

இதைப் படித்தபின்..‌ பாடல் வரிகளில் வருவது போல்.."உங்கள்‌ கண்களின்‌ இமைகளிலே சில ஞாபகங்கள் சிறகடிக்கட்டும்.."

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

நான் காணாமல் போன கதை! - திக் திக் பால்ய நினைவுகள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தி... மேலும் பார்க்க

பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறையைக் கண்முன் நிறுத்திய கண்காட்சி - ஆர்வத்துடன் பார்வையிட்ட மக்கள்

பழைய காலத்து பொருட்கள்பழைய காலத்து பொருட்கள்பழைய காலத்து பொருட்கள்பழைய காலத்து பொருட்கள்பழைய காலத்து பொருட்கள்பழைய காலத்து பொருட்கள்பழைய காலத்து பொருட்கள்பழைய காலத்து பொருட்கள்பழைய காலத்து பொருட்கள்பழ... மேலும் பார்க்க