செய்திகள் :

கனடாவில் இந்திய சீக்கிய பெண் மர்ம மரணம்!

post image

கனடாவில் பணிபுரிந்து வந்த இந்திய சீக்கிய பெண் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 19 வயதான சீக்கிய பெண் ஒருவர், கனடாவின் ஹாலிஃபேக்ஸ் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியின் பேக்கரியில் இருந்த அடுப்பிலிருந்து சடலமாக சனிக்கிழமை (அக். 19) இரவு 9.30 மணியளவில் மீட்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கான காரணத்தை விரைவில் கண்டறியுமாறு வலியுறுத்தி, மரிட்டைம் சீக்கிய சமூக அமைப்பினர் உள்பட பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் விசாரணை நடப்பதாகவும், இது தொடர்பான வதந்திகளை சமூக ஊடகங்களில் யாரும் பரப்ப வேண்டாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் இரங்கல் தெரிவித்த வால்மார்ட் நிறுவனம், எந்த நிலையிலும் உடனிருப்போம் என்றும் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க: தீபாவளி முன்னிட்டு சதித் திட்டம்? 8 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு!

ஏற்கெனவே, இந்தியாவுக்கும் கனடாவுக்குமான உறவில் அண்மையில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்திய பெண்ணின் மர்ம மரணமும் இரு நாட்டு உறவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியத் தூதருக்கு தொடர்பிருப்பதாக கனடா கூறியதற்கு, அண்மையில் இந்தியா கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது.

மேலும், கனடா மக்களை குறிவைத்து நடத்தப்படும் குற்றச்செயல்களுக்கு இந்திய அரசு துணை நிற்பதாக, இந்தியா மீது கனடா பிரதமர் குற்றஞ்சாட்டியிருந்தது, இரு நாட்டு உறவுகளில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, கனடா பிரதமரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, இந்தியாவில் உள்ள கனடா தூதா் உள்ளிட்ட 6 அதிகாரிகள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டதற்கு பதிலடி நடவடிக்கையாக, கனடாவுக்கான இந்திய தூதா் உள்பட கனடாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற கனடா அரசு உத்தரவிட்டுள்ளது.

ரஷியாவுக்கு 10 ஆயிரம் வீரர்களை அனுப்பும் வட கொரியா!

ரஷியாவுக்கு வரும் டிசம்பர் மாதத்துக்குள் 10 ஆயிரம் வீரர்களை அனுப்ப வட கொடியா முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே 3 ஆயிரம் வீரர்களை அனுப்பியுள்ள நிலையில், கூடுதலாக வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாக வட கொரிய... மேலும் பார்க்க

இலங்கையில் உள்ள இஸ்ரேல் மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் உள்ள இஸ்ரேல் குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு கரையோரம் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், இஸ்ரேல... மேலும் பார்க்க

பூமியைக் கடக்கும் 6 விண்கற்கள்! உரசினால் உலகத்துக்கு உலையா?

ஆறு விண்கற்கள் நாளை (அக். 24) பூமியைக் கடந்து செல்லவிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. பூமிக்கு அருகில் ஆறு விண்கற்கள் வியாழக்கிழமையில் (அக். 24) கடந்து செல்லவிருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 2 திருநங்கைகள் ஆணவக் கொலை!

பாகிஸ்தானில் திருநங்கைகளை ஆணவக் கொலை செய்த மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மர்தான் நகரில், ஞாயிற்றுக்கிழமையில் (அக். 20) இரண்டு திருநங்கைகளை மூன்று ப... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி

பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை என்று பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். மேலும் பார்க்க

சூடான் மசூதி மீது வான்வழித் தாக்குதலில் 31 பேர் பலி!

சூடானில் உள்ள கெசிரா மாநிலத்தின் தலைநகரான வாட் மதனியில் உள்ள மசூதியை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அரசு சாரா குழு தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிறன்று அல்-இம்... மேலும் பார்க்க