செய்திகள் :

சல்மான் கான் மீது கொலை முயற்சி: பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவருக்கு போலீஸ் காவல்

post image

ஹிந்தி நடிகர் சல்மான் கானை கொல்ல முயற்சித்த சம்பவத்தில், கைது செய்யப்பட்ட பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவரை நான்கு நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இரண்டு நாள்களுக்கு முன்பு, ஹரியாணா மாநிலம் பானிபட் பகுதியைச் சேர்ந்த சுகா என்கிற சுக்பீர் பல்பீர் சிங் என்பவரை நபி மும்பை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இவருக்கும், அண்மையில் கொல்லப்பட்ட மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலைக்கும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி மும்பை அருகே உள்ள பான்வெல் பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது, வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. நடிகர் சல்மான் கானை கொல்ல நடந்த முயற்சியாகக் கருதப்பட்ட அந்த சம்பவத்தில் 18 அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அடையாளம் காணப்படாத குற்றவாளிகளின் பெயர்களில் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில், சுக்பீர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.

நவி மும்பையின் பான்வேல்லில் உள்ள நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டுக்குச் செல்லும் வழியில் அவரைக் கொல்ல, பிஷ்னோய் அமைப்பினர் சதித்திட்டம் தீட்டினர்; இருப்பினும், நல்வாய்ப்பாக அவர்களின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.

இந்த நிலையில், சல்மான் கானின் மீதான கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சுகா என்பவர், ஹரியாணாவின் பானிபட்டில் புதன்கிழமை (அக். 16) கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சுகாவை வியாழக்கிழமையில் (அக். 17) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சல்மான் கான் மீது வெறுப்பு ஏன்?

ஹிந்தி நடிகர் சல்மான் கான் கடந்த 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தானில், அபூர்வ வகை மானை வேட்டையாடியுள்ளார். அவரால் கொல்லப்பட்ட வகை மான்கள், வடமாநிலங்களில் வாழும் பிஷ்னோய் இன மக்களால் தெய்வமாகக் கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சல்மான் கான் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் வெளிவந்தார்.

இந்த நிலையில், மான்களை வேட்டையாடியதற்காக சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் அவர் கொலை செய்யப்படுவார் என்று பிஷ்னோய் அமைப்பினர் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தனர். ஆனால், சல்மான் கான் மன்னிப்பு எதுவும் கோரவில்லை.

இதனைத் தொடர்ந்து, நடிகர் சல்மான் கானை கொலை செய்ய, லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையில் ரூ. 25 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவரைக் கொல்வதற்காக ஏ.கே. 47, ஏ.கே. 92, எம் 16, ஜிகானா முதலான ஆயுதங்களை பாகிஸ்தானிலிருந்து வாங்குவதாகத் திட்டமிட்டிருந்தனர்.

மேலும், சல்மான் கானைக் கொல்ல 18 வயதுக்குள்பட்டவர்களையே சதித்திட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். அவர்கள் அனைவரும் புணே, ராய்காட், நவி மும்பை, தாணே, குஜராத்தில் மறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

வயநாடு மக்களவை மற்றும் 24 சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக சனிக்கிழமை அறிவித்துள்ளது. அதில், கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியை எ... மேலும் பார்க்க

90 ஐஏஎஸ் அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே ஓபிசி வகுப்பினர்: ராகுல் காந்தி!

அதிகாரத்துவத்தில் உள்ள 90 ஐஏஎஸ் அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே ஓபிசி வகுப்பினைச் சேர்ந்தவர்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக வருகிற நவம்பர்... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் தேர்தல்: பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் சம்பயி சோரன்..!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் போட்டியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட்டில் ஆளுங்கட்சியாக உள்ள முதல்வர் ஹேமந்த் சோ... மேலும் பார்க்க

ரூ. 2 கோடி பணமோசடி! மத்திய அமைச்சரின் சகோதரரிடம் பெங்களூரில் விசாரணை

ரூ. 2 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த புகாரின்கீழ் மத்திய அமைச்சரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, நிலக்கரி மற்றும் சுரங்கம் துறைகளுக்கான மத்திய அமைச்சர் பிரஹலாத்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்கும் தீா்மானம்: துணைநிலை ஆளுநர் ஒப்புதல்!

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்ற அமைச்சரவை தீர்மானத்துக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப அளிக்கக் கோரி, முதல்வா் ஒமா் தலைமையிலான அ... மேலும் பார்க்க

ஹைதராபாத்: ஹிந்து அமைப்புகள் போராட்டத்தால் பதற்றம்! காவல்துறை தடியடி!

ஹைதராபாத்: சங்க் பரிவார் அமைப்புகளின் போராட்டத்தின்போது காவல்துறையினர் மீது காலணிகள் வீசப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.செகந்திராபாத் நகரிலுள்ள முத்யாலம்மன் கோயிலுக்குள் கடந்த அக்.14-ஆம் தேதி அதிகா... மேலும் பார்க்க