செய்திகள் :

ரெட்ட தல படப்பிடிப்பு நிறைவு!

post image

நடிகர் அருண் விஜய்யின் ரெட்ட தல படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மிஷன் சேப்டர்-1 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலில் வெற்றியடைந்தது.

அடுத்ததாக, பாலா இயக்கத்தில் இவர் நடித்துள்ள வணங்கான் படத்தில் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

தொடர்ந்து, அருண் விஜய்யின் 36-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப். 4 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. கிரிஸ் திருக்குமரன் இயக்கும் இப்படத்திற்கு, ’ரெட்ட தல’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அடுத்த படம் எது? அப்டேட் கொடுத்த சிம்பு!

சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தில் சித்தி இத்னானி, தன்யா, பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள்.

படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வந்தது. தற்போது, படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

திரில்லர் படமாக உருவாகும் சூர்யா - 45?

சூர்யாவின் 45-வது படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை முடித்தபிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக உருவாக... மேலும் பார்க்க

அடுத்த படம் எது? அப்டேட் கொடுத்த சிம்பு!

நடிகர் சிம்பு தன் அடுத்த படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் 48வது ... மேலும் பார்க்க

வேட்டையன்: நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு!

வேட்டையன் திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது.இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் அக்.10 ஆம் தேதி வெளியானது.கலவையான ... மேலும் பார்க்க

கங்குவா இரண்டாவது பாடல் அறிவிப்பு!

கங்குவா திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம்... மேலும் பார்க்க

அரண்மனை - 5 பணிகளில் சுந்தர். சி?

அரண்மனை படத்தின் 5 பாகப் பணிகளில் இயக்குநர் சுந்தர். சி ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.அரண்மனை - 4 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிப்படமானதுடன், ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத... மேலும் பார்க்க

நான் சாய் பல்லவியின் ரசிகன்: மணிரத்னம்

இயக்குநர் மணிரத்னம் நடிகை சாய் பல்லவி குறித்து பேசியது வைரலாகியுள்ளது.சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். அமரன் எனப் பெயரிடப்பட்... மேலும் பார்க்க