செய்திகள் :

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்கும் தீா்மானம்: துணைநிலை ஆளுநர் ஒப்புதல்!

post image

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்ற அமைச்சரவை தீர்மானத்துக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப அளிக்கக் கோரி, முதல்வா் ஒமா் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் வியாழக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீா்மானத்தின் வரைவை பிரதமா் மோடியிடம் வழங்க விரைவில் ஒமா் தில்லி செல்ல உள்ளதாகவும் வெள்ளிக்கிழமை உள்ளூா் நாளிதழில் செய்தி வெளியானது.

இந்த நிலையில், அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீா்மானம், ஆளுநரிடம் ஒப்புதல் பெற அனுப்பிவைக்கப்பட்டது. இதனையடுத்து, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்தை திரும்ப அளிக்கக் கோரும் தீர்மானத்துக்கு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஒப்புதல் அளித்துள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் இன்று (அக். 19) உறுதிப்படுத்தியுள்ளன.

இதனிடையே, ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை கோரும் தீர்மானத்தில், முன்பு இருந்ததைப் போல் ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கோராததற்கு எதிா்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பின் முதல்முறையாக பேரவைக் கூட்டத்தொடரை அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடத்தவும் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பேரவைக் கூட்டத்தொடரில் ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கோராத விவகாரத்தை முக்கியப் பிரச்னையாக எதிர்க்கட்சிகள் எழுப்புமெனத் தெரிகிறது.

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

ஒடிசாவில் வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து தந்தை-மகள் இருவரும் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், பௌத் மாவட்டத்தின் சாரிச்சக் கிராமத்தில் சுகந்த் கன்ஹரும்... மேலும் பார்க்க

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

வயநாடு மக்களவை மற்றும் 24 சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக சனிக்கிழமை அறிவித்துள்ளது. அதில், கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியை எ... மேலும் பார்க்க

90 ஐஏஎஸ் அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே ஓபிசி வகுப்பினர்: ராகுல் காந்தி!

அதிகாரத்துவத்தில் உள்ள 90 ஐஏஎஸ் அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே ஓபிசி வகுப்பினைச் சேர்ந்தவர்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக வருகிற நவம்பர்... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் தேர்தல்: பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் சம்பயி சோரன்..!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் போட்டியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட்டில் ஆளுங்கட்சியாக உள்ள முதல்வர் ஹேமந்த் சோ... மேலும் பார்க்க

ரூ. 2 கோடி பணமோசடி! மத்திய அமைச்சரின் சகோதரரிடம் பெங்களூரில் விசாரணை

ரூ. 2 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த புகாரின்கீழ் மத்திய அமைச்சரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, நிலக்கரி மற்றும் சுரங்கம் துறைகளுக்கான மத்திய அமைச்சர் பிரஹலாத்... மேலும் பார்க்க

ஹைதராபாத்: ஹிந்து அமைப்புகள் போராட்டத்தால் பதற்றம்! காவல்துறை தடியடி!

ஹைதராபாத்: சங்க் பரிவார் அமைப்புகளின் போராட்டத்தின்போது காவல்துறையினர் மீது காலணிகள் வீசப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.செகந்திராபாத் நகரிலுள்ள முத்யாலம்மன் கோயிலுக்குள் கடந்த அக்.14-ஆம் தேதி அதிகா... மேலும் பார்க்க