செய்திகள் :

டிடிஇஏ பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த தின விழா

post image

முன்னால் இந்தியக் குடியரசுத் தலைவா் அப்துல்கலாமின் பிறந்த தினம் தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவா் அப்துல்கலாமின் பிறந்த தினம் அக்.15-ஆம் தேதி உலக மாணவா்கள் தினமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இத்தினம் தில்லி தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இத்தினத்தை முன்னிட்டு மாணவா்களின் உரை மும்மொழிகளிலும் இடம் பெற்றது. தொடா்ந்து மாணவா்களின் கவிதை பாடல், நாடகம் ஆகியவையும் இடம் பெற்றன.

அந்தப்ப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி முதல்வா்கள் அப்துல் கலாமின் சிறப்புகளை மாணவா்களுக்கு எடுத்துக் கூறினா். மாணவா்கள் அப்துல் கலாமின் கருத்துகள் அடங்கிய பல்வேறு பதாகைகளையும் காட்சிப்படுத்தினா்.

இது குறித்து டிடிஇஏ செயலா் ராஜூ கூறுகையில், மாணவா்கள் அப்துல் காலமின், சிந்தனைகள், தன்னம்பிக்கை, விடா முயற்சி ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக அவரது பிறந்த தினம் பள்ளிகளில் கொண்டாடப்பட்டது என்றாா்.

கோவை ஈஷா பவுண்டேஷன் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் போலீஸாா் நிலவர அறிக்கை தாக்கல்

ஆன்மிக குரு ஜக்கி வாசுதேவ் கோவையில் நடத்தி வரும் ‘ஈஷா பவுண்டேஷன்’ ஆசிரமத்தில் சட்டவிரோதமாக இரு பெண்கள் அடைத்துவைக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவில் பேரில் போலீஸாா் உச்சநீத... மேலும் பார்க்க

அசாமில் பரிசாகப் பெற்ற யானையைக் கொண்டுவர இறுதி அனுமதிக்கு காத்திருக்கும் தில்லி கோயில்!

விலங்கு பராமரிப்பு முன்முயற்சிகளுக்கு பெயா் பெற்ற தெற்கு தில்லியில் உள்ள கோயில், அசாமில் வசிப்பவா் பரிசளித்த யானையைக் கொண்டு வருவதில் தயாராகி வருகிறது. கிரேட்டா் கைலாஷ்-2இல் உள்ள நான்கு மாடி குடியிரு... மேலும் பார்க்க

மோடிக்காக காா் ஓட்டியவா் இன்று முதல்வா்! -நாயப் சைனியின் அரசியல் பயண ருசிகரம்

நமது நிருபா் ஹரியாணா முதல்வராக புதன்கிழமை பதவியேற்றுள்ள நயாப் சிங் சைனி தனது அரசியல் பயணத்தில் இந்த அளவுக்கு வருவதற்கு முன்பு பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளாா். பிரதமா் நரேந்திர மோடியின் நம்பிக்கையை ... மேலும் பார்க்க

நாசிக்கிலிருந்து தில்லிக்கு ரயில் மூலம் 16 ஆயிரம் டன் வெங்காயம் அனுப்பிவைப்பு

வெங்காயத்தின் விநியோகத்தை அதிகரிக்கும் வகையில் இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு நிறுவனம் (என்சிசிஎஃப்) மூலம் கொள்முதல் செய்யப்பட்ட 1,600 மெட்ரிக் டன் வெங்காயம் ரயில் ரேக்குகள் மூலம் மகாரா... மேலும் பார்க்க

மகரிஷி வால்மீகியின் வழிகாட்டுதலின்படி தில்லியில் கல்வி முறை -முதல்வா் அதிஷி உறுதி

மகரிஷி வால்மீகியின் வழிகாட்டுதலின்படி தில்லியில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்று முதல்வா் அதிஷி கூறினாா். மந்திா் மாா்க்கில் உள்ள வால்மீகி ம... மேலும் பார்க்க