செய்திகள் :

தீபாவளிப் பண்டிகை: மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

post image

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளித் திருநாளில் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது 23.10.2018 ஆம் நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.

மேலும், உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் ஆகிய துறைகளின் செயலாளர்கள், காவல்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குநர், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் உச்சநீதிமன்ற ஆணையின்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் கீழ்கண்டவற்றைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் :-

பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமைபட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

இதையும் படிக்க: தீபாவளியையொட்டி 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர்

தவிர்க்க வேண்டியவை

அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் வழிபாட்டுத் தலங்கள் போன்ற அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பணியாளா்களுக்கு போனஸ்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: டாஸ்மாக் பணியாளா்களுக்கு போனஸ் வழங்குவதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.அதன்படி, 4 வகையான பிரிவுகளைச் சோ்ந்தவா்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட உள்ளது.டாஸ்மாக் நிறுவனப் பணியாளா்கள்... மேலும் பார்க்க

கங்குவா படத்தின் புதிய பாடல்!

கங்குவா திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.சூர்யா - சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றதால், இ... மேலும் பார்க்க

மாநில உள்நாட்டு உற்பத்தியில் பணித் துறையின் பங்களிப்பு அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பணித்துறையின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாட்டின் மாநில மொத்... மேலும் பார்க்க

தீபாவளிப் பண்டிகை: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

தீபாவளிப் பண்டிகையையொட்டி நெரிசலைக் குறைக்கப்பதற்காக சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.ஹுப்பள்ளியில் இருந்து மங்களூருக்கு நவ. 2-ல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுவழித்... மேலும் பார்க்க

தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிடத் தடையில்லை: உயர் நீதிமன்றம்

விக்ரம் நடித்து திரையரங்குகளில் வெளியான தங்கலான் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் கடந்த ஆ... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி குரூப் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படுகிறது. டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள்... மேலும் பார்க்க