செய்திகள் :

தீயணைப்பு அதிகாரிகளின் தாமதத்தால் இருவர் பலி: மக்கள் குற்றச்சாட்டு!

post image

தில்லியில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், தீயணைப்பு அதிகாரிகளின் தாமதமே காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தில்லியில் ஷஹதாரா பகுதியில் உள்ள ஒரு நான்கு மாடி அடுக்ககத்தில் வெள்ளிக்கிழமை (அக். 18) காலை 5.25 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. அடுக்ககத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் தீவிபத்து ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், விபத்து ஏற்பட்டு, ஒன்றரை மணிநேரத்துக்கு பிறகே தீயணைப்பு அதிகாரிகள் வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு அதிகாரிகள் அடுக்ககத்தில் வசித்து வந்த 42 வயதான ஷில்பி குப்தா, அவரது மகன் பிரணவ் குப்தா இருவரின் உடல்களையும் எரிந்த நிலையில் மீட்டுள்ளனர்.

மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்த நிலையில், அவர்களின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது.

இதையும் படிக்க:சல்மான் கான் கொலை முயற்சியில் சமரசம் செய்ய ரூ. 5 கோடி கோரிய பிஷ்னோய் கும்பல்!

இந்த நிலையில், தீயணைப்பு அதிகாரிகளின் தாமதத்தால்தான் இருவர் உயிரிழந்து விட்டதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அவர்கள் வருவதற்குள் இரண்டு தளங்களும் எரிந்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

இருப்பினும், குறுகிய பாதைகளில் வருவது சிரமம் என்பதால்தான் தீயணைப்பு அதிகாரிகளுக்கு தாமதம் ஏற்பட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு அதிகாரிகள் கூறியதாவது ``மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம். மேலும், மூச்சுத் திணறல் காரணமாகவே இருவரும் உயிரிழந்திருக்கக் கூடும். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தனர்.

தில்லி விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து 45 ஐபோன்கள் பறிமுதல்

தில்லி விமான நிலையத்தில் பயணிகள் கடத்தி வந்த 45 ஐபோன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து தில்லி சுங்கத் துறை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "வாஷிங்டனில் இருந்து தில்லிக்கு ஏர் ... மேலும் பார்க்க

இனி இலவச டயாலிசிஸ்: முதல் வாக்குறுதியை நிறைவேற்றிய நயாப் சைனி!

ஹரியாணாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என்று முதல்வர் நயாப் சைனி அறிவித்தார். அமைச்சரவையின் முதல் கூட்டத்திற்குத் தலைமை தாங்க... மேலும் பார்க்க

ஸ்டார் ஹெல்த் நிறுவன 3.1 கோடி வாடிக்கையாளர்களின் தரவுகள் விற்கப்பட்டதா?

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல சுகாதார, ஆயுள் காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தகவல்கள் கசிந்ததாக கடந்த செப்டம்பர் மாத இறுதியில் தகவல் வெளியானது. ஹேக்கர்கள்... மேலும் பார்க்க

பிகாா் கள்ளச் சாராய பலி எண்ணிக்கை 35-ஆக உயர்வு

பிகாரின் சரண், சிவான் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது. பிகாரின் சரண், சிவான் மாவட்டங்களில் உள்ள 16 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நிலை கடுமையாக ... மேலும் பார்க்க

மேற்கு வங்க கவுன்சிலருக்கு விஷம் கொடுத்து கொலை?

மேற்கு வங்க கவுன்சிலர் பூர்ணிமா காண்டு உடலில் விஷம் இருந்திருக்கலாம் என்று உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் ஜல்தா நகராட்சியின் காங்கிரஸ் கவுன்சிலர... மேலும் பார்க்க