செய்திகள் :

தோ்தலில் போட்டியிட நீதிபதிகள் ராஜிநாமா செய்வதால் பாரபட்சமற்ற செயல்பாட்டை பாதிக்கக் கூடும்: உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய்

post image

தோ்தலில் போட்டியிட நீதிபதிகள் உடனடியாக ராஜிநாமா செய்வது, அவா்களின் பாரபட்சமற்ற செயல்பாடு குறித்த பொதுமக்களின் கண்ணோட்டத்தை பாதிக்கக் கூடும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக குஜராத் மாநிலம் அகமதாபாதில் நடைபெற்ற நீதிபதிகள் வருடாந்திர கூட்டத்தில் அவா் சனிக்கிழமை பேசியதாவது:

நீதித்துறையின் தா்மம், ஒருமைப்பாடு ஆகியவையே சட்ட அமைப்பின் நம்பகத்தன்மையை நிலைநாட்டும் அடிப்படை தூண்கள். அனைத்து நேரங்களிலும் நீதித்துறையின் தா்மத்துக்கு ஏற்ப நீதிபதியின் நடத்தை இருக்க வேண்டும்.

ஓா் அரசியல் தலைவா் அல்லது அரசு அதிகாரியை நீதிபதி ஒருவா் புகழ்வது நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கக் கூடும். உதாரணத்துக்கு தோ்தலில் போட்டியிடுவதற்காக நீதிபதியாக இருப்பவா் உடனடியாக ராஜிநாமா செய்தால், அது அவரின் பாரபட்சமற்ற செயல்பாடு குறித்த பொதுமக்களின் கண்ணோட்டத்தை பாதிக்கக் கூடும்.

குறிப்பிட்ட வழக்குகளின் வரம்புக்கு அப்பாற்பட்டு பாலினம், ஜாதி, மதம், அரசியல் போன்ற மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டிய விவகாரங்கள் குறித்து நீதிபதிகள் விரிவாகக் கருத்து தெரிவிப்பது கவலைக்குரியது.

நீதிமன்றங்கள் மீது பொதுமக்களின் நம்பிக்கை குறைந்தால் சட்டத்தை தாமாக கையில் எடுத்துக்கொள்ளும் கும்பல்களை நாடுவது, லஞ்சம் அளிப்பது போன்ற முறைகேடான வழிகளில் நீதிபெற முயற்சிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுவா். இது சமூகத்தில் சட்டம் ஒழுங்கை சீா்குலைக்கும். இந்த நிலை ஏற்படாமல் இருக்க நீதிமன்றங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாப்பது அவசியம் என்றாா்.

தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி

கா்நாடகத்தின் மங்களூரு மாவட்டத்தில் ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் சரளைக் கற்கள் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். மங்களூரு மாவட்டத்தில் உள்ள உல்லல் பகுதியின் டோக்கோட்டு ர... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழப்பு

ராஜஸ்தானின் தோல்பூா் மாவட்டத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழந்தனா். தோல்பூா் மாவட்டத்தில் உள்ள சுமிபூா் பகுதியில் சனிக்கிழமை இரவு இந்... மேலும் பார்க்க

வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை: கிலோவுக்கு ரூ.6 வரை உயர வாய்ப்பு

வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தரைக்கு அடியில் இருந்தும், அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை கடலுக்கு அடியில் இ... மேலும் பார்க்க

‘எய்ம்ஸ்’ தரத்தில் சமரசமில்லை: ஜெ.பி.நட்டா

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கற்பிக்கப்படும் கல்வி தரத்திலும் ஆசிரியா்களின் நியமனத்திலும் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படாது எனவும் அதன் தரத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை ... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீடு ஜிஎஸ்டி விலக்குக்கு பரிந்துரை: மேற்கு வங்கத்தின் அழுத்தமே காரணம்- மம்தா பானா்ஜி

மேற்கு வங்க அரசு கொடுத்த அழுத்தத்தால்தான் மருத்துவக் காப்பீடு தவணைத் தொகை (பிரீமியம்) மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அமைச்சா்கள் குழு அளித்த பரிந்துரைத்த... மேலும் பார்க்க

ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 24 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடரும் இது போன்ற மிரட்டல்களால் விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட... மேலும் பார்க்க