செய்திகள் :

`நான் செய்த தவறு; 6 நாள்களாக படுக்கையிலேயே இருக்கிறேன்' - ரகுல் ப்ரீத் சிங்கிற்கு என்ன ஆயிற்று?

post image
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.

2009 ஆம் ஆண்டு கன்னட படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான இவர் தமிழில் `தடையற தாக்க', `புத்தகம்', `என்னமோ ஏதோ' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதனைத் தொடர்ந்து `ஸ்பைடர்' படத்தில் மகேஷ் பாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு கார்த்தியுடன் இணைந்து 'தீரன்' படத்தில் நடித்திருந்தார். தவிர சூர்யாவுடன் 'NGK' படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'இந்தியன் 2' படத்திலும் நடித்திருந்தார். தற்போது இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

ரகுல் ப்ரீத் சிங்

நடிப்பதை தாண்டி தனது உடலை கட்டுக்கோப்பாக வைக்க தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். அவ்வப்போது ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்யும் வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி ஜிம்மில் 80 கிலோ எடையைத் தூக்கி உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முதுகில் வலி ஏற்பட்டு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கான சிகிச்சையை எடுத்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், "நான் முட்டாள் தனமான தவறு செய்துவிட்டேன், உடற்பயிற்சியில் என்னை நானே இன்னும் முன்னேற்றிக்கொள்ள செய்த செயல் இன்று எனக்கு பயங்கரமான பின்விளைவை ஏற்படுத்திவிட்டது. கடந்த 6 நாள்களாக நான் படுத்தபடுக்கையாகவே இருக்கிறேன்.

ரகுல் ப்ரீத் சிங்

முழுவதுமாக நான் குணமடைய ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் ஆகும், ஆனால் அதிவிரைவில் நான் குணமடைய வேண்டும். தன்னம்பிக்கை இழந்து ஓய்வெடுப்பது எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் இதன் மூலம் எனது வாழ்க்கையில் முக்கியமான பாடம் ஒன்றை கற்றுக்கொண்டேன்" என்று கூறியிருக்கிறார். இந்த செய்தியைப் பார்த்த இணையவாசிகள் ``ரகுல் ப்ரீத் சிங் விரைவில் குணமடைய வேண்டும்" என்று கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Simbu : `என்னுடைய அடுத்த திரைப்படம் இதுதான்!' - `ஹின்ட்'டுடன் அப்டேட் கொடுத்த சிம்பு

நடிகர் சிம்பு அடுத்த படத்திற்கான அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து உருவாகி வரும் 'Thug Life' படத்த... மேலும் பார்க்க

Rocket Driver Review: காலப்பயணம் செய்யும் கலாம்; ஃபேண்டஸியில் இது புதுசு! ஆனாலும் ஏமாற்றம் ஏன்?

சென்னையில் இயற்பியல் பட்டப்படிப்பைப் படித்துக்கொண்டிருக்கும் பிரபாவுக்கு (விஸ்வத்) அப்துல் கலாம் போல விஞ்ஞானி ஆக வேண்டும் என்பது ஆசை. அப்பாவின் வற்புறுத்தல் காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்... மேலும் பார்க்க

Bhumika `'கன்னத்தில் முத்தமிட்டால்' Miss பண்ணிட்டேன்’ - `ஆப்பிள் பெண்ணே’ பூமிகா ஷேரிங்ஸ்

``நீங்கள் தேர்ந்தெடுத்து நடித்த படங்களின் தாக்கம் இன்றும் மக்கள் மத்தியில் உள்ளது. அது அழகான நினைவுகளை தந்து கொண்டிருக்கிறது. அந்த நினைவுகள் உங்களுக்கு எப்படியானது?”``நான் நடித்த படங்களின் நினைவுகள், ... மேலும் பார்க்க

Selvaragavan : `எவ்ளோ வேணா லவ் பண்ணுங்க, ஊர சுத்துங்க, ஆனா...' - செல்வராகவன் கூறும் காதல் அட்வைஸ்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவர், அவ்வப்போது சமூக வலைதளங்களில் வாழ்க்கையைப் பற்றி சின்ன சின்ன வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். அதுபோல, தற்போது காதல் பற்றி தனது இன்ஸ்... மேலும் பார்க்க

Bloody Beggar: இந்தப் படத்தில் கவின் நடிக்க வந்தது எப்படி?-இயக்குநர் சிவபாலன் அளித்த பதில் இதுதான்!

இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'பிளடி பக்கர்'.இப்படத்தினை தமிழ் சினிமா இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தனது 'ஃபிலமென்ட் பிக்சர்ஸ்' நிறுவனம் ச... மேலும் பார்க்க