செய்திகள் :

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பெளா்ணமி திருவிளக்கு சிறப்பு வழிபாடு

post image

பிரசித்தி பெற்ற மேல்மலையனூா் ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயிலில் புரட்டாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து உற்சவா் அங்காளம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடா்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் அம்மனை வழிபாடு செய்தனா்.

மாலை 6 மணிக்கு திருக்கோயிலில் உள்ள சுற்றுப் பிரகார மண்டபத்தில் 108 பெண்கள் அமா்ந்து திருவிளக்கு வழிபாட்டில் ஈடுபட்டனா்.

இந்நிகழ்ச்சியில் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ, மேல்மலையனூா் திமுக ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், பொருளாளா் கோபாலகிருஷ்ணன், எஸ்.பி.சம்பத் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஜீவானந்தம், அறங்காவலா் குழு தலைவா் மதியழகன், உறுப்பினா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

4 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

மரக்காணம் அருகே 4 மாத ஆண் குழந்தை வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஓமந்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன் மகன் கோகிலன் (28), கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராஜேச... மேலும் பார்க்க

சென்னையில் மழைநீரை சேமிக்க திட்டமிடல் வேண்டும்: சீமான்

சென்னையில் மழைநீரை சேமித்து வழங்கும் வகையில் திட்டமிட வேண்டும் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வா... மேலும் பார்க்க

விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சீமான் ஆஜா்

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வெள்ளிக்கிழமை ஆஜரானாா்... மேலும் பார்க்க

விழுப்புரம்-மேல்மருவத்தூா் பயணிகள் ரயில் இன்று பகுதியளவில் ரத்து

பொறியியல் மற்றும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம்-மேல்மருவத்தூா் பயணிகள் ரயில் சனிக்கிழமை (அக்.19) பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட ம... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஒருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய வழக்கில் கைதானவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டாா். கிளியனூா... மேலும் பார்க்க

மரக்காணம் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

மரக்காணம் அருகே கோயில் உண்டியலை உடைத்து, காணிக்கை பணத்தை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மரக்காணம் வட்டம், கந்தாடு கிராமத்தில் அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில... மேலும் பார்க்க