செய்திகள் :

ரூ. 2 கோடி பணமோசடி! மத்திய அமைச்சரின் சகோதரரிடம் பெங்களூரில் விசாரணை

post image

ரூ. 2 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த புகாரின்கீழ் மத்திய அமைச்சரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, நிலக்கரி மற்றும் சுரங்கம் துறைகளுக்கான மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷி மீது மேற்கண்ட மோசடி புகார் சுமத்தப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி

கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தள(ஜேடிஎஸ்) கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ தேவாவந்த் ஃபல் சிங் சௌஹாணின் மனைவியான சுனிதா சௌஹாண் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், கோபால் ஜோஷி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தனது குடும்பத்தில் ஒருவருக்கு பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பளிப்பதாக கூறி ரூ. 2 கோடி வரை பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக கோபால் ஜோஷி பகிரங்கமாக புகார் தெரிவித்துள்ளார் சுனிதா சௌஹாண்.

மேலும், கோபால் ஜோஷியின் மகன் அஜய் ஜோஷிக்கும், மத்திய அமைச்சரின் சகோதரி எனக் கூறிக்கொண்டு சுனிதா சௌஹாணிடம் அறிமுகமான விஜயலக்‌ஷ்மி ஜோஷிக்கும்(விஜய குமாரி) மேற்கண்ட குற்றச்சாட்டில் தொடர்பிருப்பதாகவும் அவர் புகாரில் பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து, மகாராஷ்டிரத்தின் கோல்ஹாபூரில் இருந்த கோபால் ஜோஷியையும், புணேயில் இருந்த அவரது மகன் அஜய் ஜோஷியையும் பசவேஷ்வரநகர் காவல்துறையினர் இன்று(அக்.19) கைது செய்து பெங்களூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் இருந்த கோபால் ஜோஷியை கைது செய்த பெங்களூரு காவல்துறை, கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில் உள்ள கோபால் ஜோஷியின் வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தனது சகோதரர் கோபால் ஜோஷியுடனான உறவை, தான் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே துண்டித்துவிட்டதாகவும் தனக்கு சகோதரிகள் யாருமில்லை என்பதையும் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெளிவுபடுத்தியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

ஒடிசாவில் வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து தந்தை-மகள் இருவரும் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், பௌத் மாவட்டத்தின் சாரிச்சக் கிராமத்தில் சுகந்த் கன்ஹரும்... மேலும் பார்க்க

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

வயநாடு மக்களவை மற்றும் 24 சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக சனிக்கிழமை அறிவித்துள்ளது. அதில், கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியை எ... மேலும் பார்க்க

90 ஐஏஎஸ் அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே ஓபிசி வகுப்பினர்: ராகுல் காந்தி!

அதிகாரத்துவத்தில் உள்ள 90 ஐஏஎஸ் அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே ஓபிசி வகுப்பினைச் சேர்ந்தவர்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக வருகிற நவம்பர்... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் தேர்தல்: பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் சம்பயி சோரன்..!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் போட்டியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட்டில் ஆளுங்கட்சியாக உள்ள முதல்வர் ஹேமந்த் சோ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்கும் தீா்மானம்: துணைநிலை ஆளுநர் ஒப்புதல்!

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்ற அமைச்சரவை தீர்மானத்துக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப அளிக்கக் கோரி, முதல்வா் ஒமா் தலைமையிலான அ... மேலும் பார்க்க

ஹைதராபாத்: ஹிந்து அமைப்புகள் போராட்டத்தால் பதற்றம்! காவல்துறை தடியடி!

ஹைதராபாத்: சங்க் பரிவார் அமைப்புகளின் போராட்டத்தின்போது காவல்துறையினர் மீது காலணிகள் வீசப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.செகந்திராபாத் நகரிலுள்ள முத்யாலம்மன் கோயிலுக்குள் கடந்த அக்.14-ஆம் தேதி அதிகா... மேலும் பார்க்க