செய்திகள் :

ஹைதராபாத்: ஹிந்து அமைப்புகள் போராட்டத்தால் பதற்றம்! காவல்துறை தடியடி!

post image

ஹைதராபாத்: சங்க் பரிவார் அமைப்புகளின் போராட்டத்தின்போது காவல்துறையினர் மீது காலணிகள் வீசப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

செகந்திராபாத் நகரிலுள்ள முத்யாலம்மன் கோயிலுக்குள் கடந்த அக்.14-ஆம் தேதி அதிகாலையில் ஆள் நடமாடமில்லாத நேரத்தில் நுழைந்த மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சல்மான் சலீம் தாக்குர் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் கர்ப்பக்கிரகத்திலிருந்த சாமி சிலையை அடித்து நொறுக்க முற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதில் சிலை உடைந்து சேதமானது.

கோயில் சிலை சேதப்படுத்தபட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கோயில்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தெலங்கானா அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி சனிக்கிழமை (அக்.19) மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க விஷ்வ ஹிந்து பரிஷத்(விஹெச்பி) அழைப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையில், கோயில் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்களுடனும், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்பட பிற ஹிந்து அமைப்புகளுடனும் இணைந்து பாஜக போராட்டம் நடத்தியுள்ளது.

இதையடுத்து போராட்டத்தின் ஒருபகுதியாக, காவிக் கொடிகளை ஏந்தியபடி ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த பலர் கோயிலின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை நோக்கி போராட்டக்காரர்கள் தண்ணீர் பாக்கெட்டுகளை வீசி எறிந்தும் , காலணிகளை கழற்றி எறிந்தும் எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றமான சூழல் நிலவியது.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். அதில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தெலங்கானாவில் குரூப்-1 தேர்வை ஒத்திவைக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களுக்கு ஆதரவாக மத்திய இணையமைச்சர் பந்தி சஞ்சய் ஹைதராபாத்தின் அசோக்நகரில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

வயநாடு மக்களவை மற்றும் 24 சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக சனிக்கிழமை அறிவித்துள்ளது. அதில், கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியை எ... மேலும் பார்க்க

90 ஐஏஎஸ் அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே ஓபிசி வகுப்பினர்: ராகுல் காந்தி!

அதிகாரத்துவத்தில் உள்ள 90 ஐஏஎஸ் அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே ஓபிசி வகுப்பினைச் சேர்ந்தவர்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக வருகிற நவம்பர்... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் தேர்தல்: பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் சம்பயி சோரன்..!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் போட்டியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட்டில் ஆளுங்கட்சியாக உள்ள முதல்வர் ஹேமந்த் சோ... மேலும் பார்க்க

ரூ. 2 கோடி பணமோசடி! மத்திய அமைச்சரின் சகோதரரிடம் பெங்களூரில் விசாரணை

ரூ. 2 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த புகாரின்கீழ் மத்திய அமைச்சரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, நிலக்கரி மற்றும் சுரங்கம் துறைகளுக்கான மத்திய அமைச்சர் பிரஹலாத்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்கும் தீா்மானம்: துணைநிலை ஆளுநர் ஒப்புதல்!

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்ற அமைச்சரவை தீர்மானத்துக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப அளிக்கக் கோரி, முதல்வா் ஒமா் தலைமையிலான அ... மேலும் பார்க்க

பூரண மதுவிலக்குதான் நிதீஷ்குமாரின் மிகப்பெரிய ஊழல்- தேஜஸ்வி யாதவ்

பூரண மதுவிலக்குதான் நிதீஷ்குமார் ஆட்சியின் மிகப்பெரிய ஊழல் என பிகார் முன்னாள் முதல்வர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். பிகாரின் சரண், சிவான் மாவட்டங்களில் உள்ள 16 கிராமங்களில் கள்ளச்சாராயம் ... மேலும் பார்க்க