செய்திகள் :

Basics of Share Market 8: டிரேடிங்கில் `லீவரேஜ்' (Leverage) என்றால் என்ன?

post image
டிரேடிங் என்பது சிலருக்குத் தொழில்... சிலருக்கு இரண்டாவது வருமானம் என்றும், காசு போட்டு காசு எடுப்பது தான் டிரேடிங் என்றும் நேற்றைய அத்தியாயத்தில் பார்த்தோம். ஆனால், தொழில் என்றால் 'முதல்' போட வேண்டுமல்லவா? அதற்கு இவர்கள் எங்கே போவார்கள்? அதற்கான பதில் தான் 'லீவரேஜ்'.

லீவரேஜ் என்றால் ஒரு கடன் போலத் தான். ஆனால், அந்தக் கடனை வாங்க நாம் எங்கேயும் போக வேண்டாம். புரோக்கர்களே தருவார்கள். இந்த இடத்தில் புரோக்கர்கள் பற்றி நாம் சற்று தெரிந்துகொள்வோம். இப்போது ராஜின் துணிக்கடையில் பங்கு வாங்க வேண்டும் என்றால், சென்னையில் இருக்கும் ஒருவர், இதற்காக கோவைக்கு பயணம் செய்ய வேண்டியதில்லை. ஜெரோதா, க்ரோ போன்ற பங்குச்சந்தை ஆப்கள் இருக்கின்றன. இந்த ஆப்களில் பதிவு செய்தாலே, நமக்கு தேவையான பங்கை நமக்கு தேவையான நிறுவனத்தில் இருந்து வாங்கிக்கொள்ளலாம்.

நமக்கு தேவையான பங்கை...

இந்த ஆப்களில் BSE மற்றும் NSE நிறுவனங்களில் பட்டியிலிடப்பட்ட பங்குகள் இருக்கும். நாமும் இந்த ஆப்களில் பதிவு செய்யும்போது, நமக்கு வேண்டுமான பங்கை வாங்கிக்கொள்ளலாம். ஆக, நமக்கும், இந்த நிறுவனங்களுக்கும் இடையில் புரோக்கர்களாக இருக்கின்றன இந்த ஆப்கள்.

இப்போது லீவரேஜுக்கு வருவோம். டிரேடிங் செய்வதற்காக நாம் எங்கேயும் கடன் வாங்க செல்ல முடியாது. அதுவும் நாம் டிரேடிங் செய்யப்போகும் அந்தச் சமயத்தில் யார் சரியாக கடன் தருவார்கள் என்று தெரியாது. ஆனால், அந்த சமயத்தில் புரோக்கர்களே தானாக வந்து நமக்குக் கடன் கொடுக்கும்போது, அது இன்னும் ஈசி அல்லவா... நம்மிடம் ரூ.100 இருக்கிறது என்றால், அவர்கள் 3X, 5X... தொகையை கடனாக தருவார்கள். அப்போது நம்மிடம் இருக்கும் ரூ.100 உடன் இந்த ரூ.300 சேர்ந்து ரூ.400 ஆக ஆகிவிடும்.

லாபமோ...நஷ்டமோ?!

அப்போது நாம் விரும்பும் பங்குகளில் இந்த ரூ.400-யும் போட்டு லாபம் பார்க்கலாம். நமது டிரேடிங் முடியும்போது, அந்த டிரேடிங் லாபத்தில் சென்றிருந்தால் கொடுத்த தொகை + லாபத் தொகையும், நஷ்டத்தில் சென்றிருந்தால் நஷ்டமான தொகையுடன் எவ்வளவாக நிற்கிறதோ, அந்தத் தொகையை எடுத்துக்கொள்வார்கள்.

இதனால் நமக்கு என்ன லாபம் என்று பார்த்தால், சில நிறுவனங்களின் பங்கை நம்மிடம் இருக்கும் பணத்தை வைத்து வாங்க முடியாது. அப்போது, புரோக்கர்களிடம் இருந்து பெறும் பணம் மூலம் அந்த பங்கை வாங்க முடியும்.

புரோக்கருக்கு என்ன லாபம் என்றால், அவர்கள் அதிக தொகை கொடுக்கும்போது, அவர்களது தளத்தில் அதிக வணிகம் நடக்கின்றது...அவர்களுக்கு பல நேரங்களில் இது லாபமாகவும் இருக்கிறது.

நாளை: 'ஷார்ட் செல்லிங்' என்றால் என்ன?

ரூ.176 கோடி லாபம் பார்த்த நிறுவனம்... எது தெரியுமா? | IPS FINANCE | EPI - 46

இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி நிஃப்டி 309 புள்ளிகள் சரிந்து 24, 472 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 930 புள்ளிகள் சரிந்து 80, 220 புள்ளிகளோட நிறைவடைஞ்சிருக்கு. இதுகுறித்து பொருளாதார விமர்சகர் வ. நாகப்பன் ... மேலும் பார்க்க

Basics of Share Market 7 : பங்குச்சந்தையில் 'டிரேடிங்' என்றால் என்ன? | Trading

'ஷேர் மார்க்கெட்ல இன்னைக்கு காலைல இவ்ளோ காசு போட்டேன்... இப்போ இவ்ளோ சம்பாதிச்சுட்டேன்' என்று நிறைய பேர் கூறி கேட்டிருப்பீர்கள். ஆனால், கடந்த அத்தியாயத்தில் 'பங்குச்சந்தை நீண்ட கால முதலீட்டுக்குத்தான்... மேலும் பார்க்க

Basics of Share Market 6 : பங்குச்சந்தையில் 'நீண்ட கால' முதலீட்டின் அவசியம் என்ன?!

நான், நீங்கள் என பெரும்பாலான சாமனிய மக்கள் பங்குச்சந்தைக்கு வருவதே 'முதலீடு' செய்யத்தான். பங்குச்சந்தையில் எதற்காக முதலீடு செய்ய வேண்டும்? என்பதற்கு முன்பு பார்த்த அத்தியாயத்தில் இருந்து 'அதிக வட்டி வ... மேலும் பார்க்க

ICICI வங்கிக்கு சம்மன் அனுப்பிய SEBI... என்ன ஆச்சு? | IPS FINANCE | EPI - 44

இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி நிஃப்டி 104 புள்ளிகள் அதிகரித்த 24,854 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 218 புள்ளிகள் அதிகரித்து 81,224 புள்ளிகளோட நிறைவடைஞ்சிருக்கு.இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃபைனான்ஸின் இந்த எ... மேலும் பார்க்க

Basics of Share Market 5 : பங்குச்சந்தையில் SEBI-யின் 'பங்கு' என்ன? | செபி

பங்குச்சந்தையில் தினமும் நீங்கள், நான், சிறிய நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள் என பலர் பணம் போட்டு, லாபம் எடுத்து லட்சம்...கோடிக்கணக்கில் வர்த்தகம் நடந்து வருகிறது.இதில் யாராவது ஒரு... மேலும் பார்க்க