செய்திகள் :

Bloody Beggar: இந்தப் படத்தில் கவின் நடிக்க வந்தது எப்படி?-இயக்குநர் சிவபாலன் அளித்த பதில் இதுதான்!

post image
இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'பிளடி பக்கர்'.

இப்படத்தினை தமிழ் சினிமா இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தனது 'ஃபிலமென்ட் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

பிளடி பக்கர்

அதில் பேசிய சிவபாலன், " நான் நெல்சனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். படம் பண்ண தயாரானப்போது அவரிடம் இந்தக் கதையை சொன்னேன். அவர் நானே தயாரிக்கிறேன் என்று சொன்னார். இந்தக் கதையை எழுதும் போது கவின் இல்லை. ஆனால் எழுதி முடித்ததும் யாருமே பிச்சைக்காரனாக யோசிக்க முடியாத ஒருவரை நடிக்க வைக்க வேண்டும் என்றுதான் அவரிடம் பேசினேன்.

சிவபாலன்

அவர் கதையைக் கேட்டுவிட்டு நடிக்க சம்மதித்தார். ஒரு பிச்சைக்காரனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. நான் எழுதிய கதாபாத்திரத்துக்கு கவின் உயிர் கொடுத்திருக்கிறார். இந்தப் படம் சிறப்பாக அமைய காரணமாக இருந்த என்னுடைய படக்குழுவினருக்கு நன்றி ” எனக் கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Simbu : `என்னுடைய அடுத்த திரைப்படம் இதுதான்!' - `ஹின்ட்'டுடன் அப்டேட் கொடுத்த சிம்பு

நடிகர் சிம்பு அடுத்த படத்திற்கான அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து உருவாகி வரும் 'Thug Life' படத்த... மேலும் பார்க்க

Rocket Driver Review: காலப்பயணம் செய்யும் கலாம்; ஃபேண்டஸியில் இது புதுசு! ஆனாலும் ஏமாற்றம் ஏன்?

சென்னையில் இயற்பியல் பட்டப்படிப்பைப் படித்துக்கொண்டிருக்கும் பிரபாவுக்கு (விஸ்வத்) அப்துல் கலாம் போல விஞ்ஞானி ஆக வேண்டும் என்பது ஆசை. அப்பாவின் வற்புறுத்தல் காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்... மேலும் பார்க்க

`நான் செய்த தவறு; 6 நாள்களாக படுக்கையிலேயே இருக்கிறேன்' - ரகுல் ப்ரீத் சிங்கிற்கு என்ன ஆயிற்று?

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.2009 ஆம் ஆண்டு கன்னட படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான இவர் தமிழில் `தடையற தாக்க', `புத்தகம்', `என்னமோ ஏதோ' உள்ளிட்ட படங்... மேலும் பார்க்க

Bhumika `'கன்னத்தில் முத்தமிட்டால்' Miss பண்ணிட்டேன்’ - `ஆப்பிள் பெண்ணே’ பூமிகா ஷேரிங்ஸ்

``நீங்கள் தேர்ந்தெடுத்து நடித்த படங்களின் தாக்கம் இன்றும் மக்கள் மத்தியில் உள்ளது. அது அழகான நினைவுகளை தந்து கொண்டிருக்கிறது. அந்த நினைவுகள் உங்களுக்கு எப்படியானது?”``நான் நடித்த படங்களின் நினைவுகள், ... மேலும் பார்க்க

Selvaragavan : `எவ்ளோ வேணா லவ் பண்ணுங்க, ஊர சுத்துங்க, ஆனா...' - செல்வராகவன் கூறும் காதல் அட்வைஸ்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவர், அவ்வப்போது சமூக வலைதளங்களில் வாழ்க்கையைப் பற்றி சின்ன சின்ன வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். அதுபோல, தற்போது காதல் பற்றி தனது இன்ஸ்... மேலும் பார்க்க