செய்திகள் :

Exit Polls: `சம்பந்தப்பட்ட அமைப்புகள் சுயபரிசோதனை செய்துகொள்ள நேரம் வந்துவிட்டது' - தேர்தல் ஆணையம்

post image

தேர்தல் நேரத்து கருத்துக்கணிப்பு முடிவுகள் அந்தச் சமயத்தில் மக்கள் எண்ணவோட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. ஆனால், பல நேரங்களில் இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தேர்தல் முடிவுகளுக்கு நேர் மாறாக அமைவதுண்டு. எனவே, இத்தகைய கருத்துக்கணிப்புகள் மீது விமர்சனங்களும் எழாமல் இல்லை...

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க தனியாகவே 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்றே கூறின.

Exit Poll 2024 Live Updates

ஆனால், பா.ஜ.க-வால் தனியாக ஆட்சியமைக்கக் கூடிய அளவிலான இடங்களைக் கூட பெற முடியவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. இந்த நிலையில், தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடும் அமைப்புகள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்வதற்கான நேரம் வந்துவிட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பின்போது இது குறித்துப் பேசியிருக்கும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், ``தேர்தல் கருத்துக்கணிப்புகளை நாங்கள் நிர்வகிப்பதில்லை. இருப்பினும், அதற்கான மாதிரி அளவு என்ன என்பது உட்பட அதனை சுயபரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அமைப்புகள் சுய கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலான இடைவெளி விரக்திக்கு வழிவகுக்கும்" என்றார்.

``தோற்றால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்!" - டிரம்பும், அவர் போட்டியிட்ட தேர்தல்களும்!

'ஒருவேளை இந்த தேர்தலில் தோற்றுவிட்டால், இனி எப்போதுமே தேர்தலில் போட்டியிட மாட்டேன்" என்று நேர்காணல் ஒன்றில் டிரம்ப் பேசியுள்ளார். வரும் நவம்பர் 5-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்... மேலும் பார்க்க