செய்திகள் :

Salman Khan: `சல்மான் கான் மன்னிப்பு கேட்டால்...' - 25 ஆண்டு பகைக்கு பிஷ்னோய் சமூகம் புதிய தீர்வு!

post image

பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு படப்பிடிப்புக்குச் சென்றபோது அங்கு அபூர்வ வகை மானை வேட்டையாடியதாக தெரிகிறது. அந்த வகை மான்களை வடமாநிலங்களில் வாழும் பிஷ்னோய் இன மக்கள் தெய்வமாக கருதுவதாக கூறப்படுகிறது. மான்களை வேட்டையாடியதற்காக சல்மான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சல்மான் கானுக்கு எதிராக பிஷ்னோய் இன மக்கள் போராட்டம் நடத்தினர். சல்மான் கானுக்கு இவ்வழக்கில் கோர்ட் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2018ம் ஆண்டு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. இவ்வழக்கில் சல்மான் கான் கோர்ட் மூலம் வெளியில் வந்தார். இதையடுத்து டெல்லி மாஃபியா கும்பல் தலைவர் லாரன்ஸ் பிஷ்னோயும் நடிகர் சல்மான் கான் மான்களை வேட்டையாடியதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

சல்மான் கான்

ஆனால் சல்மான் கான் மன்னிப்பு கேட்கவில்லை. இதையடுத்து லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்ந்து சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கிறார். அதோடு சல்மான் கானை ஆள் அனுப்பி கொலை செய்யவும் முயற்சி மேற்கொண்டார். சல்மான் கான் வீட்டிலும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். சமீபத்தில் மும்பையில் நடிகர் சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை லாரன்ஸ் பிஷ்னோய் ஆட்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்தனர். இதனால் சல்மான் கானுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்பிரச்னைக்கு தீர்வு காண பிஷ்னோய் இன தலைவர்கள் முன்வந்துள்ளனர். இது தொடர்பாக தேசிய பாரதிய பிஷ்னோய் மகாசபை தலைவர் தேவேந்திர புதியா அளித்த பேட்டியில், ''நடிகர் சல்மான் கான் எங்களது இடத்திற்கு வந்து தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கவேண்டும். அப்படிக் கேட்டால் அவரை மன்னிப்பது குறித்து எங்களது சமுதாய தலைவர்கள் ஒன்று கூடி அவருக்கு மன்னிப்பு கொடுப்பது குறித்து முடிவு செய்வார்கள். எங்களது மத குரு ஜம்பேஷ்வரின் 29 விதிகளில் 10-வது விதியில் மன்னிப்பது குறித்து தெரிவித்துள்ளார். யாராவது தவறு செய்தால் அதற்காக அவர் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டால், மன்னித்துவிடுவோம். எங்களது சமுதாயம் யாருக்கும் தீங்கு விளைவிக்காது'' என்று தெரிவித்தார்.

ஆனால் சல்மான் கான் மன்னிப்பு கேட்பாரா என்று தெரியவில்லை. சல்மான் கான் தனது நெருங்கிய நண்பரை பறிகொடுத்துள்ளார். சல்மான் கான் பாதுகாப்புக்கு இடையே தனது சிகந்தர் படத்தின் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளார். அடுத்த வாரம் இந்த படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் கூடுதல் பாதுகாப்பு போடவும், ஆட்களின் எண்ணிக்கையை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டப் படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்கெனவே படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்ட பகுதியை மாற்றவும் முடிவு செய்திருப்பதாக சல்மான் கானுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

Tamannaah Bhatia : பிட்காயின் மோசடி; நடிகை தமன்னாவிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை!

தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வரும் நடிகை தமன்னா பாட்டியா பிட்காய்ன் மோசடியில் தொடர்புடைய மொபைல் செயலியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. HPZ Token என்ற அந்த மொபைல் செயல... மேலும் பார்க்க

Pamban: கட்டுப்பாட்டு அறை டு 360 டிகிரி பாம்பன் ரயில் தூக்குப்பாலம்| Exclusive Photo Album

பாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bri... மேலும் பார்க்க

`இந்த பாம்பு என்ன கடிச்சிருச்சு டாக்டர்' - தோளில் பாம்புடன் நுழைந்த நபர்... பரபரப்பான மருத்துவமனை!

பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மண்டல். இவரை கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே பிரகாஷ் மருத்துவமனைக்கு செல்லாமல் தன்னை கடித்த பாம்பை விரட்டி பிடித்... மேலும் பார்க்க

சேலம்: முட்டைக்குள் ஓவியம்; புடவை நெசவு - ரசித்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி!

தமிழக ஆளுநர் RN Ravi நெசவாளர்களுடன் தமிழக ஆளுநர் RN Ravi நெசவாளர்களுடன் தமிழக ஆளுநர் RN Ravi நெசவாளர்களுடன் தமிழக ஆளுநர் RN Ravi தமிழக ஆளுநர் RN Ravi தமிழக ஆளுநர் RN Ravi தமிழக ஆளுநர் RN Ravi தமிழக ஆள... மேலும் பார்க்க

ரஷ்யா: 67 நாள்கள் நடுக்கடலில் தத்தளிப்பு; இரு சடலங்களுடன் இருந்தவர் உயிருடன் மீட்பு - என்ன நடந்தது?

கிழக்கு ரஷ்யாவின் ஓகோட்ஸ்க் கடலில் 2 மாதங்களுக்கும் மேலாக மிதவைப் படகில் சிக்கிக்கிடந்த நபர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மிகைல் பிச்சுகின் என்ற 46 வயது நபர் அக்டோபர் 14ம் தேதி கண்டறியப்பட்டபோது, அந்த... மேலும் பார்க்க