செய்திகள் :

Simbu : `என்னுடைய அடுத்த திரைப்படம் இதுதான்!' - `ஹின்ட்'டுடன் அப்டேட் கொடுத்த சிம்பு

post image
நடிகர் சிம்பு அடுத்த படத்திற்கான அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.

மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து உருவாகி வரும் 'Thug Life' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு . மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. அசோக் செல்வன் , த்ரிஷா, அபிராமி , ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 'Thug Life' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவுக்கு வந்துள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமலுடன் சிம்பு

இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் 48வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு எதுவும் துவங்கவில்லை. தற்போது தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் சிம்பு.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர், "தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணைத்தாண்டி வருவாயா இணைந்த ஜென் இசட் (gen z 1995 2010க்குள் பிறந்தவர்கள்) கதைதான் நம்ம அடுத்த திரைப்படம்" எனத் தெரிவித்திருக்கிறார். இயக்குநர், தயாரிப்பாளர் குறித்த அறிவிப்பு அதையும் அவர் தெரிவிக்கவில்லை.

Rocket Driver Review: காலப்பயணம் செய்யும் கலாம்; ஃபேண்டஸியில் இது புதுசு! ஆனாலும் ஏமாற்றம் ஏன்?

சென்னையில் இயற்பியல் பட்டப்படிப்பைப் படித்துக்கொண்டிருக்கும் பிரபாவுக்கு (விஸ்வத்) அப்துல் கலாம் போல விஞ்ஞானி ஆக வேண்டும் என்பது ஆசை. அப்பாவின் வற்புறுத்தல் காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்... மேலும் பார்க்க

`நான் செய்த தவறு; 6 நாள்களாக படுக்கையிலேயே இருக்கிறேன்' - ரகுல் ப்ரீத் சிங்கிற்கு என்ன ஆயிற்று?

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.2009 ஆம் ஆண்டு கன்னட படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான இவர் தமிழில் `தடையற தாக்க', `புத்தகம்', `என்னமோ ஏதோ' உள்ளிட்ட படங்... மேலும் பார்க்க

Bhumika `'கன்னத்தில் முத்தமிட்டால்' Miss பண்ணிட்டேன்’ - `ஆப்பிள் பெண்ணே’ பூமிகா ஷேரிங்ஸ்

``நீங்கள் தேர்ந்தெடுத்து நடித்த படங்களின் தாக்கம் இன்றும் மக்கள் மத்தியில் உள்ளது. அது அழகான நினைவுகளை தந்து கொண்டிருக்கிறது. அந்த நினைவுகள் உங்களுக்கு எப்படியானது?”``நான் நடித்த படங்களின் நினைவுகள், ... மேலும் பார்க்க

Selvaragavan : `எவ்ளோ வேணா லவ் பண்ணுங்க, ஊர சுத்துங்க, ஆனா...' - செல்வராகவன் கூறும் காதல் அட்வைஸ்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவர், அவ்வப்போது சமூக வலைதளங்களில் வாழ்க்கையைப் பற்றி சின்ன சின்ன வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். அதுபோல, தற்போது காதல் பற்றி தனது இன்ஸ்... மேலும் பார்க்க

Bloody Beggar: இந்தப் படத்தில் கவின் நடிக்க வந்தது எப்படி?-இயக்குநர் சிவபாலன் அளித்த பதில் இதுதான்!

இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'பிளடி பக்கர்'.இப்படத்தினை தமிழ் சினிமா இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தனது 'ஃபிலமென்ட் பிக்சர்ஸ்' நிறுவனம் ச... மேலும் பார்க்க