செய்திகள் :

Suriya: `சில்லுனு ஒரு காதல்' ; சூர்யாவும் ஜோதிகாவும் மீண்டும் திரையில்? - சூர்யாவின் பதில்!

post image
பிரமாண்டமான முறையில் வெளியாகிறது `கங்குவா'.

சூர்யாவின் கரியரில் மிக முக்கியமான திரைப்படமாக கருதப்படும் இத்திரைப்படத்தின் மூலம் தமிழில் பாபி தியோலும் திஷா பதானியும் அறிமுகமாகிறார்கள். கங்குவா திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பரபரப்பாக இருக்கிறார் சூர்யா.

தனியார் செய்தி நிறுவனத்தின் ஒரு புரோமோஷன் நிகழ்வில் நீங்களும் ஜோதிகாவும் எப்போது சேர்ந்து நடிக்கப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த சூர்யா, " ஒவ்வொரு திரைப்படமும் ஆர்கானிக்காக நிகழ வேண்டும். திரைக்கதையாசிரியர்களும், இயக்குநர்களும்தான் அதை முடிவு செய்ய வேண்டும். நாங்கள் இருவரும் `2டி என்டர்டெயின்மென்ட்' என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறோம் என்பதற்காக ஒரு இயக்குநரிடம் இத்திரைப்படத்தின் ரீமேக்கில் எங்கள் இருவரை நடிக்க வைக்கிறீர்களா? என நாங்கள் கேட்கமாட்டோம்.

Suriya, Jyothika

எனக்கு பிடிக்காமல் இருந்த கதை ஜோதிகாவுக்கு பிடித்திருக்கிறது. சில்லனு ஒரு காதல் திரைப்படத்தில் எனக்கு சில விஷயங்கள் இப்படி இருந்திருக்கலாம் என தோன்றியது. ஆனால், ஜோதிகாவுக்கு அந்த கதை பிடித்திருந்தது. `நான் நடிக்கிறேன். நீ நடிக்கிறீயா இல்லையா?' எனக் கேட்டார். வேறு ஹீரோ ஜோதிகாவுடன் பணியாற்றவேண்டாம் என நடித்துவிட்டேன் (சிரிக்கிறார்)." என்றவர், " நீண்ட வருடங்களுக்குப் பிறகு அல்லு அரவிந்த் சார் `கஜினி 2` திரைப்படம் தொடர்பான ஐடியாவை சொன்னார். அதற்கான பேச்சுகள் தொடங்கியிருக்கலாம். அது நடக்கலாம்!" என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Kanguva: `ஒவ்வொரு காட்சியையும் 100 முறைக்கு மேல் பார்த்தேன்!' - மதன் கார்க்கியின் கங்குவா விமர்சனம்!

அடுத்த மாதம் பிரமாண்டமான முறையில் வெளியாகவிருக்கிறது `கங்குவா'.சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதுதான் திஷா பதானி மற்றும் பாபி தியோலின் தமிழ் டெபுட்! அதிகப்படியான பொர... மேலும் பார்க்க

Kanguva Vs Francis : ரெண்டு பேருக்கும் இருக்கிற வித்தியாசம் இது தான்! -Director Siva | Suriya | DSP

விகடன் குழுவினருக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், கங்குவா பற்றிய விவரங்களை முதன்முறையாகப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் சிவா. அவர் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது, தயாரிப்புக்கு முந்தைய பணிகள் மற்றும் ப... மேலும் பார்க்க

Suriya: ``20 வருடங்களுக்கு முன்னால் ரஜினி சார் சொன்ன அந்த விஷயம்!'' - சூர்யா பேட்டி!

அடுத்த மாதம் 14- ம் தேதி திரைக்கு வருகிறது கங்குவா.சூர்யா, பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். படத்தின் ப்ரோமோஷன் பணிகளை ஒரு மாதத்திற்கு முன்பாகவே ப... மேலும் பார்க்க

Amaran: "அந்த தருணத்துல சிவகார்த்திகேயனா பாக்கல; முகுந்த் வரதராஜனா பாத்தோம்.." - நடிகர் ஶ்ரீ குமார்

தீபாவளி வெளியீடாக `அமரன்' திரைக்கு வருகிறது.இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் அதாவது முகுந்த் வரதராஜனின் `கேட்' குழுவில் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் நடித்திருக்கிறார்கள். தமிழிலிருந்து நமக்கு மி... மேலும் பார்க்க

Ajith: ``இப்ப புரியுதா நான் ஏன் சிவாவ விடலைன்னு'' - சூர்யாவிடம் அஜித் சொன்ன விஷயம்!

நடிகர் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கிறது கங்குவா திரைப்படம். இதன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்த திரைப்பட முந்தைய தமிழ் சினிமா வசூல் சாதனைகளை முறியடிக்கும் என்றுக் கூறியிருக்கிறார்.சிறுத... மேலும் பார்க்க