செய்திகள் :

Vijay: "அழைப்பு விடுக்காவிட்டாலும் TVK மாநாட்டிற்கு செல்வேன், ஏனென்றால்..!” - விஷால் சொல்வதென்ன?

post image
விஜய் அழைப்பு விடுக்கவில்லை என்றாலும், வாக்காளராக தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்து கொள்வேன் என நடிகர் விஷால் தெரிவித்திருக்கிறார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நாடு முழுவதும் ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குபின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய விஷால், " கோயிலுக்கு சென்று கடவுள்களை பார்ப்பதை விட, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு மறுவாழ்வு அடைந்தவர்களை பார்ப்பது அபூர்வமான விஷயம். நமது நாட்டிலேயே ஆசிட் வீச்சால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு அந்த பாதிப்பில் இருந்து வெளியே வராமல் இருக்கிறார்கள். ஆசிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணாடி கூட பார்க்க முடியாமல் இருக்கிறார்கள்.

விஷால்

ஆனால் அவர்கள் வெளியே வரவேண்டும். மனதில் இருந்து ஒருவருக்கு நல்லது நினைப்பது தான் அழகு. இதுபோன்ற அழகானவர்களுக்கு விருது கொடுப்பதுதான் பெருமை. தேசிய விருதுகளை விட, இதுபோன்ற விருதுகள் தான் எனக்கு முக்கியம். இது போன்ற விருதுகள் மேல்தான் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட டெல்லியில் இருந்து வந்த பெண் என்னோடு நடிக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அவருடன் நடிப்பேன்" என்றார்.

பிறகு தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு அழைப்பு எதுவும் வந்திருக்கிறதா? நீங்கள் மாநாட்டிற்கு செல்வீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், " ஒரு வாக்காளராக தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு செல்வேன். அழைப்பு விடுக்காமலே தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு செல்வேன். இப்போது இருக்கின்ற அரசியல்வாதிகளை விட, அவர் என்ன நல்லது செய்யப் போகிறார் என்று தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் மக்களோடு மக்களாக சென்று பார்ப்பேன். மாநாட்டிற்கு அழைப்பு தேவையில்லை. மாநாட்டில் எங்கேயாவது ஒரு ஓரத்தில் நின்று அவர் என்ன பேசப்போகிறார் என்று பார்ப்பேன். புது அரசியல்வாதி வருகிறார்.

விஜய் - விஷால்

அவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க வேண்டும். அதைக் கேட்க வேண்டும். அதை ஏன் தொலைக்காட்சியில் பார்க்க வேண்டும். நேரடியாகவே சென்று பார்த்தால் நல்லதுதான். அதற்காக மாநாட்டிற்கு செல்வேன். அவருடைய கருத்து, அவர் என்ன மக்களுக்கு கூறப் போகிறார் என்பதை பார்ப்பதற்காகவே மாநாட்டுக்கு செல்வேன். தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவேனா என்பதற்கு இப்போது என்னால் பதில் கூற முடியாது. முதலில் விஜய் மாநாடு நடத்தட்டும்.

விஜய் முதல் அடி வைக்கட்டும், அவர் என்ன செய்யப் போகிறார் ? அவருடைய செயல்பாடுகள் என்ன? என்ன நல்லது செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்துதான் கட்சியில் இணைவது குறித்து முடிவெடுக்க முடியும். தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. நானும் ஒரு அரசியல்வாதிதான்.

விஷால்

சமூகப்பணி செய்பவர்கள் அனைவருமே அரசியல்வாதிகள்தான்." என்றார். தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த கேள்விக்கு, அவுங்க அவுங்க பிரச்சனை, அவுங்க அவுங்க கருத்து, அவுங்க சர்ச்சை, அவரவர் திணிப்பு. அதைப்பற்றி நான் சொல்ல விரும்பவில்லை” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://bit.ly/47zomWY

Kanguva: ``உங்கள் குடும்பத்தை எப்போதும் விட்டுக்கொடுக்காதீர்கள்!'' - வைரலாகும் சூர்யா டாக்

'கங்குவா' புரொமோஷன் நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களிடம் சூர்யா பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.சூர்யா நடிப்பில் `சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `கங்குவா'. மிகப் பிரமாண்டமான... மேலும் பார்க்க

Sobhita: நாக சைதன்யா - துலிபாலா திருமண கொண்டாட்டம் ஆரம்பம்... வைராலகும் புகைபடங்கள் | Photo Album

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொ... மேலும் பார்க்க

Kalan: "நான் ஓவர் ஆக்டிங் செய்தாலும் அதை கண்டுக்காமல்..." - தீபா சங்கர் நகைச்சுவை பேச்சு

ராமலெட்சுமி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் கலன் திரைப்படத்தை, `கிடுகு’ படத்தை இயக்கிய வீரமுருகன் எழுதி இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் அப்ப... மேலும் பார்க்க

Kalan: "பெரிய சம்பளம் கிடைக்கும் என நினைத்தேன்; ஆனால்..." - நடிகர் அப்புகுட்டி கலகல பேச்சு

`கிடுகு’ படத்தை இயக்கிய வீரமுருகன் எழுதி இயக்கியிருக்கும் படம் கலன். ராமலெட்சுமி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் அப்புகுட்டி, தீ... மேலும் பார்க்க

"என்னுடைய ஸ்டைல்லதான் படத்தை எடுப்பேனு முன்னாடியே சொல்லிட்டேன்..!"- வேட்டையன் குறித்து த.செ.ஞானவேல்

`ஜெய் பீம்' படத்தின் மூலம் இந்திய சினிமா முழுக்க கவனம் பெற்றவர் இயக்குநர் த.செ.ஞானவேல். அவரின் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வேட்டையன்'.இந்தப் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்ச... மேலும் பார்க்க