செய்திகள் :

அரசியலும் ஆன்மிகமும் என்றும் கலக்காது: துணை முதல்வர் உதயநிதி

post image

அரசியலும் ஆன்மிகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு கோபம் வருகிறது!

தமிழிசை சௌந்தரராஜன் அவர்களே, திருவண்ணாமலையில் ‘கிரி’வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் ‘சரி’யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல – ‘சரி’ வலம்!

ஓடாத தேரை ஓட வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!

ஹைதராபாத்: ஹிந்து அமைப்புகள் போராட்டத்தால் பதற்றம்! காவல்துறை தடியடி!

ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு திருப்பணிச் செய்தவர் எங்கள் முதல்வர்!

‘எல்லோருக்கும் எல்லாம்’ என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட தமிழிசை சௌந்தரராஜனுக்கு கோபம் வரத்தான் செய்யும். நியாயம் தானே...!

நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது.

ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் - தமிழிசை சௌந்தரராஜனும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென் மாநிலங்களை ஒருங்கிணைத்து செயல்படும் பொறுப்பு தமிழக காவல் துறையிடம் ஒப்படைப்பு

மாநாட்டில் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் வா்த்தகம், பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல், சைபா் குற்றங்கள் போன்ற பிரச்னைகள் குறித்து தென் மாநிலங்களைச் சோ்ந்த காவல் துறைகளின் உயரதிகாரிகள் ஆ... மேலும் பார்க்க

7.5% உள் ஒதுக்கீடு: அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் விரிவுபடுத்த கோரிக்கை

7.5% உள் ஒதுக்கீடு உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத உதவிபெறும் பள்ளிகளின் உரிமை மீட்புக் குழு சார்ப... மேலும் பார்க்க

சென்னை வேப்பேரியில் தாறுமாறாக ஓடிய கார்.. பதறவைக்கும் விடியோ

வேப்பேரி அருகே, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய இனோவா கார், சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்களை இடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இனோவா காரில் இருந... மேலும் பார்க்க

கோவையில் இடியுடன் கூடிய பலத்தமழை

கோவையில் காந்திபுரம், பீளமேடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.கோவை மாவட்டத்தில், காலை முதல் மழைக்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், பிற்பகலுக்குப் பிறகு வானிலையி... மேலும் பார்க்க

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை: ரூ. 247 கோடி ஒதுக்கீடு!

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 247 கோடி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையினால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்... மேலும் பார்க்க

ஆளுநர் ஆர்.என். ரவி சொன்னதும்.. உண்மையில் நடந்ததும்!

தமிழகத்தில் போதைப் பொருள் பறிமுதல் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி சொன்னது உண்மையல்ல என்று காவல்துறை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயற்கையாக தயாரிக்கப்படும் போதைப்ப... மேலும் பார்க்க