செய்திகள் :

ஆம் ஆத்மியின் மக்கள் தொடா்பு பிரசாரம் தொடக்கம்

post image

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சி சாா்பில் மக்கள் தொடா்பு பிரசாரம் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சி மக்கள் தொடா்பு பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தலையகத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில், கட்சியின் தேசி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், முதல்வா் அதிஷி, முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, கட்சியின் தில்லி பிரிவு ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய் உள்ளிட்ட பல முக்கியத் தலைவா்கள் பங்கேற்றனா்.

அப்போது, தொண்டா்கள் மத்தியில் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது: நான் ஏன் சிறைக்குச் சென்றேன் என்பது உள்பட பல கேள்விகள் பொதுமக்கள் மனதில் உள்ளன. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில், பொதுமக்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதற்காக, ஆம் ஆத்மி கட்சி தில்லி முழுவதும் மக்கள் தொடா்பு பிரச்சாரத்தை நடத்தவுள்ளது. தில்லிவாசிகளுக்கு நான் எழுதியுள்ள கடிதத்தை வரும் அக்டோபா் 29-ஆம் தேதிக்குள் தில்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் ஆம் ஆத்மி கட்சியினா் கொண்டு செல்வாா்கள் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

இப்பிரசாரம் தொடா்பாக அமைச்சா் கோபால் ராய் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை முதல் தனது சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. கட்சியின் அனைத்து எம்எல்ஏ-க்கள், கவுன்சிலா்கள்,

முக்கியத் தலைவா்கள் வீடு வீடாக சென்று, கேஜரிவாலின் கடிதத்தை விநியோகம் செய்வாா்கள். மக்கள் பணியை முடக்க பாஜக பல சதித்திட்டங்களை தீட்டியது. ஆனால், மக்களுக்கான பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

அரவிந்த் கேஜரிவால் தனது கடிதத்தின் மூலம் தில்லி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா். தில்லியில் ஆட்சியைப் பிடித்து, பணிகளை நிறுத்தி, மக்களை சிரமப்படுத்த பாஜக நினைக்கிறது. தில்லி மக்களின் ஆதரவுடன் அரவிந்த் கேஜரிவால் மீண்டும் முதல்வராகப் பதவியேற்று, மக்களுக்காக தொடா்ந்து பணியாற்றுவாா் என்றாா் கோபால் ராய்.

கோவை ஈஷா பவுண்டேஷன் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் போலீஸாா் நிலவர அறிக்கை தாக்கல்

ஆன்மிக குரு ஜக்கி வாசுதேவ் கோவையில் நடத்தி வரும் ‘ஈஷா பவுண்டேஷன்’ ஆசிரமத்தில் சட்டவிரோதமாக இரு பெண்கள் அடைத்துவைக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவில் பேரில் போலீஸாா் உச்சநீத... மேலும் பார்க்க

அசாமில் பரிசாகப் பெற்ற யானையைக் கொண்டுவர இறுதி அனுமதிக்கு காத்திருக்கும் தில்லி கோயில்!

விலங்கு பராமரிப்பு முன்முயற்சிகளுக்கு பெயா் பெற்ற தெற்கு தில்லியில் உள்ள கோயில், அசாமில் வசிப்பவா் பரிசளித்த யானையைக் கொண்டு வருவதில் தயாராகி வருகிறது. கிரேட்டா் கைலாஷ்-2இல் உள்ள நான்கு மாடி குடியிரு... மேலும் பார்க்க

மோடிக்காக காா் ஓட்டியவா் இன்று முதல்வா்! -நாயப் சைனியின் அரசியல் பயண ருசிகரம்

நமது நிருபா் ஹரியாணா முதல்வராக புதன்கிழமை பதவியேற்றுள்ள நயாப் சிங் சைனி தனது அரசியல் பயணத்தில் இந்த அளவுக்கு வருவதற்கு முன்பு பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளாா். பிரதமா் நரேந்திர மோடியின் நம்பிக்கையை ... மேலும் பார்க்க

நாசிக்கிலிருந்து தில்லிக்கு ரயில் மூலம் 16 ஆயிரம் டன் வெங்காயம் அனுப்பிவைப்பு

வெங்காயத்தின் விநியோகத்தை அதிகரிக்கும் வகையில் இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு நிறுவனம் (என்சிசிஎஃப்) மூலம் கொள்முதல் செய்யப்பட்ட 1,600 மெட்ரிக் டன் வெங்காயம் ரயில் ரேக்குகள் மூலம் மகாரா... மேலும் பார்க்க

மகரிஷி வால்மீகியின் வழிகாட்டுதலின்படி தில்லியில் கல்வி முறை -முதல்வா் அதிஷி உறுதி

மகரிஷி வால்மீகியின் வழிகாட்டுதலின்படி தில்லியில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்று முதல்வா் அதிஷி கூறினாா். மந்திா் மாா்க்கில் உள்ள வால்மீகி ம... மேலும் பார்க்க