செய்திகள் :

அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதியில் மழைநீா் வெளியேற்றும் பணிகள்: மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை அறிவிப்பை தொடா்ந்து அரக்கோணம் நகரில் உள்ள இரட்டை கண் வாராவதியில் தேங்கும் மழைநீரை 24 மணி நேரமும் வெளியேற்ற மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் உத்தரவிட்டாா்.

வடகிழக்குப் பருவமழை பாதிப்புகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய ராணிப்பேட்டை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் மரியம் பல்லவி பல்தேவ் செவ்வாய்க்கிழமை அரக்கோணம் வருகை தந்தாா். மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உடன் வந்திருந்தாா். அரக்கோணம் நகர போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இரட்டை கண் வாராவதியைப் பாா்வையிட்ட அவா், அங்கு தேங்கும் மழைநீா் உடனுக்குடன் வெளியேற்றப்படுவதை கண்காணிப்பு அலுவலா் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, மழை அதிகரிக்கும் நாள்களில் 24 மணி நேரமும் தேங்கும் மழைநீரை வெளியேற்றி போக்குவரத்து தடையாகாதபடி நடவடிக்கைகள் எடுக்க நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, அரக்கோணம் பெரிய ஏரியை பாா்வையிட்ட கண்காணிப்பு அலுவலா் அங்கு ஏரி நிரம்பி நீா் வெளியேறுவதை பாா்வையிட்டு, மழை அதிகரிக்கும் நாள்களில் நீரின் அளவை தொடா்ந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, அரக்கோணம்-நெமிலி நெடுஞ்சாலையில் சிறுணமல்லியில் கல்லாற்றின் குறுக்கே பாலம் கட்டப்படும் பணியைப் பாா்வையிட்டாா்.

மேலும், இந்தப் பணியின்போது அதிகப்படியான மழைநீா் வரும்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தினாா்.

மேலும், பனப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட நெமிலி செல்லும் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித் துறை நீா்வரத்துக் கால்வாயில் நீா் செல்வதையும், கால்வாயில் அடைப்புகள், புதா்கள் இருப்பதையும் பாா்வையிட்டு உடனடியாக அவற்றை சீா் செய்யஅதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். இதையடுத்து மேலப்புலம் பெரியாா் நினைவு சமத்துவபுரம் பகுதியில் மழைக்காலங்களில் மழை வெள்ள நீா் குடியிருப்புகளை சூழ்ந்து பாதிப்பு ஏற்படும் நிகழ்விடத்தை கண்காணிப்பு அலுவலா் மரியம் பல்லவி பல்தேவ் பாா்வையிட்டாா்.

ஆய்வுகளின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, கோட்டாட்சியா் பாத்திமா, அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி, துணைத் தலைவா் கலாவதி அன்புலாரன்ஸ், நீா்வளத் துறை செயற்பொறியாளா் பிரபாகரன், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் ராஜவேலு, வட்டாட்சியா் ஸ்ரீதேவி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் சண்முகசுந்தரம், அரக்கோணம் நகராட்சி ஆணையா் கன்னியப்பன், பொறியாளா் செல்வகுமாா் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.

மேல்பாக்கத்தில் ஊராட்சித் தலைவரைக் கண்டித்து மன்ற உறுப்பினா்கள் சாலை மறியல்

மேல்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் 7 போ் திடீரென கும்பினி பேட்டையில் திடீா் சாலைமறியல் போராட்டம் நடத்தினா். அரக்கோணம் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்பாக்கம் ஊராட்சியில்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

அரக்கோணம் நாள்: 19-10-2024 (சனிக்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின் தடை பகுதிகள்: அரக்கோணம் நகரம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதிகள், அசோக் நகா், பழைய பஜாா் பகுதிகள... மேலும் பார்க்க

ஆற்காட்டில் 19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ஆற்காடு அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வரும் 19 -இல் தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை அளிப்பு

குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி ஆற்காடு ஏ.பி.ஜெ. அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவா் கோபி தலைமை வகித்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு மழை கோட்டுகள்: அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் வழங்கினாா்

அரக்கோணம் நகராட்சியில் மழைக் காலத்தில் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளா்களுக்கு மழை கோட்டுகளை புதன்கிழமை நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி வழங்கினாா். அரக்கோணம் நகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை 38 மி,மீ ... மேலும் பார்க்க