செய்திகள் :

Pakistan: ``கடந்த காலத்தை புதைக்க வேண்டிய நேரம்'' - ஜெய்சங்கர் வருகை பற்றி நவாஸ் ஷெரிஃப் கருத்து!

post image

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான இறுக்கத்தைத் தளர்த்த இது ஒரு நல்ல தொடக்கம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்.

நவாஸ் 3 முறை பாகிஸ்தானின் பிரதமராக பதவிவகித்தவர். தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃபின் அண்ணனும் கூட. ஜெய்சங்கரின் வருகையை வரவேற்றுப் பேசிய நவாஸ், எதிர்கட்சியைச் சேர்ந்த இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது மோடியை கடுமையாக பேசியிருந்ததை விமர்சித்தார்.

"இம்ரான் கான் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை முறிக்கும் வேலைகளைச் செய்தார். நான் அப்படி பேசியிருக்க மாட்டேன். எங்களுக்கு சில விழுமியங்களை மதிப்பதில் நம்பிக்கை இருக்கிறது" என்றார் நவாஸ் ஷெரிஃப்.

இந்தியா - பாகிஸ்தான் உறவில் தொடர்ந்து பல விரிசல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நேரத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் கலந்துகொள்ள கடந்த செவ்வாய் அன்று 24 மணிநேர பயணமாக இஸ்லாமாபாத் சென்றார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

கடைசியாக 2015-ம் ஆண்டு ஷெரிஃப் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி பாகிஸ்தான் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த பயணத்தின்போது ஷெரிஃபையும் சந்தித்தார் மோடி. அந்த நினைவுகளைக் பகிர்ந்த ஷெரிஃப், "அது சிறிய சம்பிரதாயம் அல்ல" என்று கூறியுள்ளார்.

காபுலில் மோடி முன்னாள் பிரதமரும் ஆளும் கட்சி (PMLN) தலைவருமான நவாஸ் ஷெரிஃபை சந்தித்தார். அந்த சந்திப்பில் பஞ்சாப் முதல்வரும் ஷெரிஃபும் மகளுமான மர்யம் ஷெரிஃபும், ஷெரிஃபின் தாயும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் மோடியின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தார் இம்ரான் கான். ஆனால் தற்போதைய பிரதமரும் ஆளும் கட்சித் தலைவர்களும் ஜம்முவில் மோடி எடுக்கும் முடிவுகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் மோடி

நவாஸ் ஷெரிஃப் அவரது பேச்சில், "இந்தியா நமது அண்டை நாடு. நாமே நினைத்தாலும் அதை மாற்ற முடியாது. நாங்கள் SCO மாநாட்டுக்கு மோடி வருவார் என எதிர்பார்த்தோம். ஆனால் ஜெய்சங்கர் வந்தார். இரு நாட்டு நல்லுறவை இயல்பாக்க நாங்கள் மீண்டும் மீண்டும் முயற்சிகிறோம். ஆனால் கடந்த 75 ஆண்டுகளாக தோற்றுக்கொண்டிருக்கிறோம். இன்னும் 75 ஆண்டுகள் தோற்றுவிடக் கூடாது என்பதுதான் இப்போது முக்கியம்." எனக் குறிப்பிட்டார்.

மேலும், "இரு பக்கமும் குறைகள் இருக்கின்றன. ஆனால் இது கடந்த காலத்தை புதைக்க வேண்டிய தருணம்" என்றார் நவாஸ்.

சார்க் மாநாடு உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் இருநாட்டு உறவுகளை பலப்படுத்த பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன், நவாஸ் பிரதமராக இருந்த காலத்தில் வாஜ்பாய் பாகிஸ்தானில் இருந்து மின்சாரம் வாங்க தன்னை அணுகியது குறித்தும் நினைவுகூர்ந்தார்.

வாஜ்பாய்

கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வீரர்களை அனுப்ப வேண்டும் என்றும், தான் கிரிக்கெட் பார்க்க இந்தியாவுக்கு சென்றதாகவும், கிரிக்கெட் மூலம் நல்லுறவை வளர்க்க முடியும் என்றும் கூறினார்.

நவாஸ், "ஏன் இந்திய, பாகிஸ்தானி விவசாயிகள் தங்கள் பொருள்களை விற்க வெளிநாடுகளை அணுக வேண்டும்? அம்ரித்ஸரில் இருந்து லாஹூருக்கு வரும் பொருள்கள் தற்போது துபாய் வழியாக வருகின்றன. இதனால் லாபம் அடைவது யார்? இரண்டு மணி நேரத்தில் நடக்க வேண்டிய காரியத்துக்கு இரண்டு வாரங்கள் ஆகின்றது" என்றும் பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மதுரை: பல நூற்றாண்டுகளாக விவசாயத்திற்கு உதவிய கிருதுமால் நதி... கழிவுநீர் ஓடையாக மாறிய அவலம்..!

மதுரை மாவட்டம் நாகமலை அடிவாரத்தில் அமைந்த துவரிமான் கண்மாயில் உற்பத்தியாகிறது. இது மதுரையைக் கடந்து சிவகங்கை மாவட்டத்தின் கொந்தகை கண்மாயை அடைகிறது. பின் இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழவலசை எனுமிடத்தில் ... மேலும் பார்க்க

``சுள்ளான்கள் எல்லாம் அடுத்த எம்.ஜி.ஆர்னு சொல்றாங்க!'' - விஜய்யை சாடினாரா? ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று அ.தி.மு.க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் ரஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார்.அப்போது பேசிய அவர், "மக்களை சந்தித்து அண்ணா தி.மு.... மேலும் பார்க்க

Gaza: கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர்; போரின் முடிவு நெருங்கிவிட்டதா... நெதன்யாகு என்ன சொல்கிறார்?

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், முதற்கட்ட டி.என்.ஏ டெஸ்டிங் மூலம் உறுதிபடுத்தியிருக்கிறார்.யாஹ்யா சின்வார்தான் அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது த... மேலும் பார்க்க

``இல்லம் தேடி மருத்துவம் வரலை, மழைவெள்ளம் தான் வந்தது'' - அதிமுக மருத்துவ அணி செயலாளர் கிண்டல்..

அதிமுக மருத்துவர் அணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னை, கடல் மட்டத்திலிருந்து வெறும் ஆறு அடி தான் உள்ளது. சாதாரண மழைக்கு தாங்க முடியாத நகரமாக மாறிவிட்டது, ஆனால், சர... மேலும் பார்க்க

ஆளுநர் ரவியை ஆராதிக்கிறதா திமுக அரசு? - அதிமுகவின் புதிய குற்றச்சாட்டும் பின்னணியும்!

பாராட்டிய ஆளுநர்!இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. தொடங்கிய முதல் நாளே தலைநகர் சென்னையில் அதிகனமழை வெளுத்து வாங்கியது. மூன்று நாள் மழை பெய்யும் என்று சொல்லப்பட்... மேலும் பார்க்க