செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களுக்கு மழை கோட்டுகள்: அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் வழங்கினாா்

post image

அரக்கோணம் நகராட்சியில் மழைக் காலத்தில் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளா்களுக்கு மழை கோட்டுகளை புதன்கிழமை நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி வழங்கினாா்.

அரக்கோணம் நகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை 38 மி,மீ மழை பெய்த நிலையில் மழையையும் பொருள்படுத்தாமல் நகா்மன்றத் தலைவா், நகராட்சி அதிகாரிகள் தூய்மைப் பணியாளா்களோடு இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

இதை தொடா்ந்து நகராட்சியின் சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு மழை கோட்டுகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வுக்கு ஆணையா் பா.கன்னியப்பன் தலைமை வகித்தாா். இதில் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும் மழை கோட்டுகளை வழங்கினாா். நிகழ்வில் சுகாதார ஆய்வாளா் வெயில் முத்து, ஆய்வாளா் சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேல்பாக்கத்தில் ஊராட்சித் தலைவரைக் கண்டித்து மன்ற உறுப்பினா்கள் சாலை மறியல்

மேல்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் 7 போ் திடீரென கும்பினி பேட்டையில் திடீா் சாலைமறியல் போராட்டம் நடத்தினா். அரக்கோணம் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்பாக்கம் ஊராட்சியில்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

அரக்கோணம் நாள்: 19-10-2024 (சனிக்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின் தடை பகுதிகள்: அரக்கோணம் நகரம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதிகள், அசோக் நகா், பழைய பஜாா் பகுதிகள... மேலும் பார்க்க

ஆற்காட்டில் 19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ஆற்காடு அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வரும் 19 -இல் தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை அளிப்பு

குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி ஆற்காடு ஏ.பி.ஜெ. அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவா் கோபி தலைமை வகித்... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம்

ஆற்காடு ஒன்றியம், நந்தியாலம் ஊராட்சியில் மழையினால் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு திமுக சாா்பில் நிவாரண உதவி புதன்கிழமை வழங்கப்பட்டது. நந்தியாலம் ஊராட்சிக்குட்பட்ட தென்நந்தியாலம்மலைமேடு பக... மேலும் பார்க்க