செய்திகள் :

காமன்வெல்த் போட்டிகளை நடத்தாமல் இருப்பதே நல்லது! ப.சிதம்பரம்

post image

பல்வேறு விளையாட்டுகள் இல்லாத காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தாமல் இருப்பதே நல்லது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்த காமன்வெல்த் போட்டிகள் நிதி தட்டுப்பாடு காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அடுத்தாண்டு இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், நிதிப் பற்றாக்குறை காரணமாக முக்கிய விளையாட்டுகளான ஹாக்கி, கிரிக்கெட், மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளன.

ப.சிதம்பரம் விமர்சனம்

காமன்வெல்த் சம்மேளனத்தின் நடவடிக்கையை விமர்சித்து ப.சிதம்பரம் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“ஹாக்கி, துப்பாக்கிச் சூடு, பேட்மிண்டன், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ் மற்றும் வில்வித்தை போட்டிகள் இல்லாத காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தாமல் இருப்பதே நல்லது.

கிளாஸ்கோவில் அனைத்து போட்டிகள் கொண்ட காமன்வெல்த் விளையாட்டை நடத்த முடியவில்லை என்றால், ஆஸ்திரேலியா விலகியபோது, நடத்த ஒப்புக் கொண்டது ஏன்? வேறு நகரத்துக்கு மாற்ற வழிவகை செய்யாதது ஏன்?

இந்த விஷயத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொண்டு, கைவிடப்பட்ட அனைத்து விளையாட்டுகளையும் மீண்டும் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : 2026 காமன்வெல்த் போட்டிகள்: ஹாக்கி,கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல் நீக்கம்! இந்தியாவுக்கு கடும் பாதிப்பு!

10 விளையாட்டுகள் மட்டுமே சோ்ப்பு

வரும் 2026-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் ஜூலை 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது. தடகளம், பாரா தடகளம், நீச்சல், பாரா நீச்சல், ஆா்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ், டிராக் சைக்கிளிங், பாரா சைக்கிளிங், நெட்பால், பளுதூக்குதல், பாரா பவா் லிஃப்டிங், குத்துச்சண்டை, ஜூடோ, பௌல்ஸ், பாரா பௌல்ஸ், 3-3 கூடைப்பந்து, 3-3 வீல்சோ் கூடைப்பந்து போன்றவை நடத்தப்படுகின்றன.

நிதி நிலைக்கு ஏற்றவாறு முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஹாக்கி, மல்யுத்தம், துப்பாக்கிச்சுடுதல், கிரிக்கெட், டேபிள் டேன்னிஸ், ஸ்குவாஷ், பாட்மின்டன், டிரையத்லான் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தியா அதிகம் பதக்கம் பெறும், விளையாட்டு நீக்கத்தால், விளையாட்டு ஆா்வலா்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

இந்தியாவுக்கு கடும் பாதிப்பு

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பதக்க அறுவடை செய்யும் விளையாட்டுகளாக துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், கிரிக்கெட், ஹாக்கி உள்ளன. இவை நீக்கப்பட்டது இந்திய விளையாட்டுத் துறைக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனால் வீரா், வீராங்கனைகள் அதிா்ச்சிக்கு ஆளாகியுள்ளனா்.

ஹாக்கியில் இந்தியா 3 வெள்ளி, 2 வெண்கலமும், மகளிா் அணி தங்கம் உள்பட 3 பதக்கங்கள் வென்றுள்ளது. பாட்மின்டனில் 10 தங்கம் உள்பட 31 பதக்கங்கள் வென்றுள்ளது. துப்பாக்கி சுடுதலில் 63 தங்கத்துடன் 135 பதக்கங்கள், மல்யுத்தத்தில் 49 தங்கம் உள்பட 114 பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் மாசுக்குக் காரணம் பாஜகவின் மோசமான அரசியல்: அதிஷி

தலைநகரில் அதிகரித்துவரும் காற்றும் மற்றும் நீர் மாசுபாட்டிற்கு பாஜகவின் மோசமான அரசியலே காரணம் என தில்லி முதல்வர் அதிஷி குற்றம் சாட்டினார். வஜிராபாத் தடுப்பணையைப் பார்வையிட்ட பிறகு அவர் கூறியது, ஹரியாண... மேலும் பார்க்க

ஆசிரியர் தாக்கியதில் மூளைக்காயம்: சிறுமிக்கு வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை

மும்பை: டியூசன் ஆசிரியர், காதுக்கு அருகே இரு முறை பலமாக அறைந்ததில், மூளைக் காயமடைந்த 9 வயது சிறுமி, வென்டிலேட்டர் உதவியோடு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பார்க்க

பல் இல்லாத.. சுற்றுச்சூழல் சட்டங்கள்: பயிர்க்கழிவுகள் எரிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம்

புது தில்லி: பற்கள் இல்லாத சுற்றுச்சூழல் சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பதாக மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டியிருக்கிறது. பயிர்க் கழிவுகளை எரிப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதி... மேலும் பார்க்க

வயநாடு தொகுதிக்காக மக்களவையில் 2 பிரதிநிதிகள் இருப்பர்.. ராகுல் சூசகம்!

நாட்டிலேயே நாடாளுமன்றத்தில் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட ஒரே தொகுதி வயநாடு என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்தார். கேரளத்தின் வயநாட்டு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் க... மேலும் பார்க்க

வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா வதேரா (52), இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.வயநாடு மக்களவைத் தொகுதியில் வேட்புமனு ... மேலும் பார்க்க

வயநாடு மக்களுக்குச் சேவையாற்ற வாய்ப்பு தாருங்கள்: பிரியங்கா காந்தி

வயநாடு தொகுதியில் இன்று பிரியங்கா வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில், அங்கு நடைபெற்றுவரும் பிரசாரக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி உரையாற்றி வருகிறார். கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியின் இடைத்த... மேலும் பார்க்க