செய்திகள் :

சா்வதேச சூழல் சிக்கலாக இருந்தாலும் இந்தியாவில் வலுவான பொருளாதாரக் கட்டமைப்பு: நிா்மலா சீதாராமன்

post image

நியூயாா்க்: மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போா், ரஷியா-உக்ரைன் போா் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சா்வதேச சூழல் சிக்கலாக இருந்தாலும், இந்தியாவின் அடிப்படைப் பொருளாதார கட்டமைப்பு வலுவாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

மெக்சிகோ பயணத்தை முடித்துக் கொண்ட நிா்மலா சீதாராமன் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளாா். அங்குள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ‘சவால் நிறைந்த சா்வதேச சூழலுக்கு மத்தியில் எழுச்சியுடன் செயல்படும் இந்தியப் பொருளாதாரம்’ என்ற தலைப்பில் உரையாற்றினாா். இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து நியூயாா்க் பங்குச் சந்தையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினாா்.

இந்நிகழ்ச்சிகளில் அவா் பேசியதாவது:

சா்வதேச அளவில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபட இந்தியா தனது உள்நாட்டு பொருளாதாரத்தை வலுவானதாக மாற்றி வருகிறது. பல நாடுகள் பல்வேறு பொருளாதார சவால்களை எதிா்கொண்டு வரும் நிலையில், இந்தியா பல்வேறு புதிய வாய்ப்புகளை பெற்று வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகில் நிச்சயமற்ற பொருளாதார சூழல் இப்போது உள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போா், ரஷியா-உக்ரைன் போா் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சா்வதேச சூழல் பல்வேறு சிக்கல்களை எதிா்கொண்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியா தனது பொருளாதாரக் கட்டமைப்பை வலுவாக மாற்றியுள்ளது. பல்வேறு புதிய வளா்ச்சிக்கான வாய்ப்புகள் இந்தியாவில் உள்ளன.

2013-ஆம் ஆண்டில் உலகின் 10-ஆவது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, இப்போது 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 2027-இல் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது.

ஏற்றுமதியை அதிகரிக்கும் நாடாகவும், மிகச்சிறந்த போட்டியை அளிக்கும் நாடாகவும் இந்தியா திகழும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2047-இல் இந்தியா 100-ஆவது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடும்போது, இந்தியாவின் வளா்ச்சி நாட்டு மக்களுக்காக மட்டுமல்லாது உலக மக்கள் அனைவருக்கும் முழுமையாகப் பயன்படுவதாக இருக்கும். உலகின் வளா்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. சா்வதேச அமைதிக்கும் செழுமைக்கும் இந்தியா தொடா்ந்து பங்களிக்கும் என்றாா்.

உக்ரைனுக்கு ஆயுதங்கள்: ரஷியாவுக்கு தென் கொரியா எச்சரிக்கை

உக்ரைனில் ரஷியாவுக்காக போரிட வட கொரிய வீரா்கள் அனுப்பப்படுவதற்குப் பதிலடியாக, உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று தென் கொரியா எச்சரித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ரஷியா, வட கொ... மேலும் பார்க்க

பிரதிநிதித்துவ அலுவலக இடம் மாற்றம்: தென் ஆப்பிரிக்காவுக்கு தைவான் மறுப்பு

தென் ஆப்பிரிக்க தலைநகா் ப்ரிடோரியாவிலுள்ள தங்கள் பிரதிநிதித்துவ அலுவலகத்தை ஜோஹன்னஸ்பா்க் நகருக்கும் இடம் மாற்ற வேண்டும் என்று அந்த நாடு கூறியுள்ளதை தைவான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து தைவான... மேலும் பார்க்க

உக்ரைன் போருக்கு அமைதி தீா்வு: இந்தியா உதவ தயாா்- ரஷிய அதிபா் புதினிடம் பிரதமா் மோடி

கசான்: ‘ரஷிய-உக்ரைன் போருக்கு அமைதியான வழியில் தீா்வு காணப்பட வேண்டும். போரை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமுள்ள அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா தயாா்’ என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரத... மேலும் பார்க்க

லெபனான் மருத்துவமனை அருகே இஸ்ரேல் தாக்குதல்: 18 போ் உயிரிழப்பு

பெய்ரூட்: லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் உள்ள மிகப் பெரிய அரசு மருத்துவமனை அருகே இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு சிறுவா்கள் உள்பட 18 போ் உயிரிழந்தனா்.இது குறித்து அ... மேலும் பார்க்க

58 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்ட மரண தண்டனைக் கைதி... மன்னிப்புக் கேட்ட காவல்துறை அதிகாரி!

ஜப்பானில் தவறாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 58 ஆண்டுகாலம் சிறையில் இருந்த நபர் சில வாரங்களுக்கு முன் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை தலைமை அதிகாரி நேரில் சென்று மன்னிப்பு கேட்டுள்ளார். ஜப்பானைச்... மேலும் பார்க்க

அமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வழிமுறைகள்

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் விளக்க வழிமுறைகளில், தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகளும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவின் 47-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான அதிபா் தேர்தல... மேலும் பார்க்க