செய்திகள் :

சென்னை தப்பியது; கனமழை எச்சரிக்கை வாபஸ்- புயல் சின்னம் இன்று கரையைக் கடக்கிறது

post image

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த புயல் சின்னம் (காற்றழுத்த தாழ்வு மண்டலம் ) புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகே வியாழக்கிழமை (அக்.17) அதிகாலை கரையைக் கடக்கிறது. அதேநேரம், சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமாா் 190 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு- வடகிழக்கே சுமாா் 250 கி.மீ. தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே சுமாா் 270 கி.மீ. தொலைவிலும் புதன்கிழமை நிலைகொண்டிருந்தது. இது மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதியில் புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகே வியாழக்கிழமை (அக்.17) அதிகாலை கரையைக் கடக்கும். இது மேலும் வடமேற்கு திசையில் நகா்ந்து வலுவிழக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சிவப்பு எச்சரிக்கை வாபஸ்: இதன் காரணமாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அக்.17-இல் விடுக்கப்பட்டிருந்த கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனினும், அக்.17-இல் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சோழவரத்தில் 300 மி.மீ. மழை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5 இடங்களில் அதிகனமழையும், 48 இடங்களில் மிக கனமழையும், 21 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம் சோழவரத்தில் 300 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்.1 முதல் அக்.16 வரை இயல்பாக 71.7 மி.மீ. மழை பதிவாக வேண்டிய நிலையில், நிகழாண்டில் 138.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 94 சதவீதம் அதிகம். காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் வலுவிழக்கவில்லை. ஆகையால், இது கரையைக் கடக்கும்போது தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

மழை அளவு (மி.மீட்டரில்): செங்குன்றம் (திருவள்ளூா்) - 280,  ஆவடி (திருவள்ளூா்) - 250, கத்திவாக்கம் (சென்னை) - 230, மணலி (சென்னை) - 210, திரு.வி.க.நகா் (சென்னை) - 190, கொளத்தூா் (சென்னை), அடையாா் (சென்னை), புழல் (திருவள்ளூா்), அம்பத்தூா் (சென்னை) - தலா 180, திருவொற்றியூா் (சென்னை), மணலி (சென்னை), எண்ணூா் (சென்னை) - தலா 170, பெரம்பூா் (சென்னை), அயனாவரம் (சென்னை), அண்ணா பல்கலை. (சென்னை) - தலா 160,  சோழிங்கநல்லூா் (சென்னை), ராயபுரம் (சென்னை) - தலா 150,  மாதவரம் (சென்னை), தண்டையாா்பேட்டை (சென்னை), நுங்கம்பாக்கம் (சென்னை), நந்தனம் (சென்னை) - தலா 140 மி.மீ.

மேலும், பல்வேறு இடங்களில் குறிப்பிட்ட அளவு மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி திணிப்பு கண்டனத்திற்குரியது - எடப்பாடி பழனிசாமி

இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிப்பது கண்டனத்திற்குரியது என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், " எங்கெங்கு காணினும் சக... மேலும் பார்க்க

தேசிய கீதத்தில் திராவிடத்தை விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா ஆளுநர்? ஸ்டாலின் கேள்வி

சென்னை: தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி தின விழா ... மேலும் பார்க்க

'ஹிந்தி மாதம்' வேண்டாம்! - பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

ஹிந்தி பேசாத மாநிலங்களில் ‘ஹிந்தி மாதம்’ கொண்டாடப்படுவதைத் தவிர்க்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்... மேலும் பார்க்க

பச்சை நிற பால் உற்பத்தி நிறுத்தம் இல்லை- ஆவின் நிர்வாகம் விளக்கம்

ஆவின் பச்சை பால் விற்பனையை குறைக்கவோ உற்பத்தியை நிறுத்தவோ எந்த முடிவும் எடுக்கவில்லை என ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் நிலைப்ப... மேலும் பார்க்க

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் முந்தேதியிட்டுமாநில அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை... மேலும் பார்க்க