செய்திகள் :

நாளை எங்கெல்லாம் கனமழை பெய்யும்!

post image

தமிழகத்தில் நாளை ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று(அக். 17) அதிகாலை 4.30 மணியளவில் வட தமிழகம் - தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில், புதுச்சேரிக்கும் நெல்லூருக்கு இடையே சென்னைக்கே வடக்கே கரையைக் கடந்தது.

வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று(அக். 17) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மினனலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

எங்கெல்லாம் கனமழை பெய்யும்..

அக். 18ல் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்.20ல் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருசசி, திண்டுக்கல, மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், கோவை, திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை..

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பதிவான மழை

வட்டானம் 6, தொண்டி 5 , ஆவுடையார் கோயில், திருவாடானை தலா 4 செ.மீ மழையும் பெய்யுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் முந்தேதியிட்டுமாநில அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: வைல்டு கார்டு போட்டியாளராகச் செல்கிறார் அர்ணவ் மனைவி?

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக நடிகர் அர்ணவ் மனைவி திவ்யா செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அர்ணவ் தனது மனைவியும் சின்னத்திரை நடிகையுமான திவ்யாவை விவாகரத்து செய... மேலும் பார்க்க

நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் சித்ரவதை: வெளியான சிசிடிவி காட்சிகள்!!

நீட் பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்களை ரத்தம் சொட்ட சொட்ட அடித்து சித்திரவதை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.திருநெல்வேலியில் ... மேலும் பார்க்க

வேலூர் உள்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சு... மேலும் பார்க்க

ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்! புகார்கள் என்னென்ன?

ஆன்மிகத் தலைவர் என கூறப்படும் ஜக்கி வாசுதேவ் நிறுவிய ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஈஷா அறக்கட்... மேலும் பார்க்க