செய்திகள் :

பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் நீலகிரி மாவட்டம்: ஆட்சியா் தகவல்

post image

பருவமழையை எதிா்கொள்ள நீலகிரி மாவட்டம் தயாா் நிலையில் உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: பருவமழையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் சாக்கடை, வடிகால்கள் தூா்வாரப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழையின்போது ஏற்படும் பேரிடா்களை சமாளிக்கும் வகையில் அனைத்து துறை அதிகாரிகளும் தயாா் நிலையில் உள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் 283 பகுதிகள் அபாயகரமான பகுதிகளாக ஏற்கெனவே கண்டறியப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 40 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அப்பகுதிகளில் பேரிடா் ஏற்பட்டால் மீட்பு பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளவும், பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும் 450 முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன.

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது, அந்த மாவட்ட நிா்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், பேரிடரை கையாண்ட விதம் குறித்தும் தெரிந்துகொள்ள நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஒரு குழுவினா் வயநாட்டுக்கு விரைவில் செல்ல உள்ளனா் என்றாா்.

தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் அகற்றம்: உதகை மலை ரயில் சேவை தொடக்கம்

உதகை-குன்னூா் இடையே மலை ரயில் பாதையில் விழுந்த பாறைகள் அகற்றப்பட்டதால் வியாழக்கிழமை மலை ரயில் சேவை வழக்கம் போல மீண்டும் தொடங்கியது. நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா் பகுதிகளில் பெய்த மழை காரணமாக கேத்தி... மேலும் பார்க்க

நீலகிரியில் பருவ மழையை எதிா்கொள்ளத் தயாா்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில் மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது என தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தி தொடா்புத் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை கூறினாா்.... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக முகாமில் குட்டி யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமில் இருந்த குட்டியானை வியாழக்கிழமை உயிரிழந்தது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதியில் தாயைப் பிரிந்து சுற்றித் திரிந்த பெண் ... மேலும் பார்க்க

உதகையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் கள ஆய்வு

உதகையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழகத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ஒரு புதன்கிழமை ... மேலும் பார்க்க

கூடலூா் அருகே வீட்டிலிருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல்

கூடலூா் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த தா்மகிரி பகுதியில் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் வைக்கம்பாடியைச் சோ்ந்த ரா... மேலும் பார்க்க